குடியரசுத் தலைவர் செயலகம்
விஜயதசமி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
11 OCT 2024 5:03PM by PIB Chennai
விஜயதசமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விஜயதசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜயதசமி பண்டிகை அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது. இந்தத் தருணத்தில், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத, கலாச்சார நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.
உயர்ந்த மனித லட்சியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் புனிதமான பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. கண்ணியம், கடமைக்கான அர்ப்பணிப்பு, நடத்தையில் தூய்மை, பணிவு, நீதிக்கான போராட்டம் ஆகியவற்றின் பல எழுச்சியூட்டும் கதைகள் இந்த விழாவுடன் தொடர்புடையவை. இந்த கதைகள் நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.
நம்பிக்கை, வைராக்கியம் ஆகியவற்றின் அடையாளமான இந்தப் பண்டிகை அனைவருக்கும் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
***
SMB/DL
(Release ID: 2064230)
Visitor Counter : 47
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam