நிதி அமைச்சகம்
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும்
தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
Posted On:
10 OCT 2024 1:25PM by PIB Chennai
மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.
வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
2024 அக்டோபர் மாதத்திற்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் மாநில வாரியான வரிப்பகிர்வு
வரிசை
எண்
|
மாநிலத்தின் பெயர்
|
மொத்தம்
(கோடி ரூபாயில்)
|
1
|
ஆந்திரப் பிரதேசம்
|
7,211
|
2
|
அருணாச்சலப் பிரதேசம்
|
3,131
|
3
|
அசாம்
|
5,573
|
4
|
பீகார்
|
17,921
|
5
|
சத்தீஸ்கர்
|
6,070
|
6
|
கோவா
|
688
|
7
|
குஜராத்
|
6,197
|
8
|
ஹரியானா
|
1,947
|
9
|
இமாச்சலப் பிரதேசம்
|
1,479
|
10
|
ஜார்க்கண்ட்
|
5,892
|
11
|
கர்நாடகா
|
6,498
|
12
|
கேரளா
|
3,430
|
13
|
மத்தியப் பிரதேசம்
|
13,987
|
14
|
மகாராஷ்டிரா
|
11,255
|
15
|
மணிப்பூர்
|
1,276
|
16
|
மேகாலயா
|
1,367
|
17
|
மிசோரம்
|
891
|
18
|
நாகாலாந்து
|
1,014
|
19
|
ஒடிசா
|
8,068
|
20
|
பஞ்சாப்
|
3,220
|
21
|
ராஜஸ்தான்
|
10,737
|
22
|
சிக்கிம்
|
691
|
23
|
தமிழ்நாடு
|
7,268
|
24
|
தெலங்கானா
|
3,745
|
25
|
திரிபுரா
|
1,261
|
26
|
உத்தரப் பிரதேசம்
|
31,962
|
27
|
உத்தராகண்ட்
|
1,992
|
28
|
மேற்கு வங்கம்
|
13,404
|
***
(Release ID: 2063773)
MM/PKV/AG/KR
(Release ID: 2063817)
Visitor Counter : 149