பிரதமர் அலுவலகம்
திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2024 2:09PM by PIB Chennai
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு ராம் விலாஸ் ஒரு சிறந்த தலைவர் என்றும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க முழுமையாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது மிக நெருங்கிய நண்பரும், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க வாழ்வை அர்ப்பணித்தார். பல ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக பணியாற்றியதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
***
(Release ID: 2063111)
PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2063132)
வருகையாளர் எண்ணிக்கை : 99
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam