பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டல், நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 05 OCT 2024 6:50PM by PIB Chennai


மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு. தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, திரு. அஜித் பவார் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர மூத்த பிரமுகர்களே, மகாராஷ்டிர மாநிலத்தின் சகோதர, சகோதரிகளே!

உங்களுடன் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நான் இன்று மகாராஷ்டிரா வந்துள்ளேன். மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மராத்தி அல்லது மகாராஷ்டிராவுக்கான கௌரவம் மட்டுமல்ல. அறிவு, தத்துவம், ஆன்மீகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் வளமான கலாச்சாரத்தை நாட்டிற்கு வழங்கிய பாரம்பரியத்திற்கு இது ஒரு மரியாதை. இதற்காக பாரதத்திலும், உலகெங்கிலும் உள்ள மராத்தி பேசும் அனைத்து மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே, 

இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘வளர்ந்த இந்தியா’  என்ற ஒரே குறிக்கோள்தான் உள்ளது. அதனால்தான் எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு உறுதிமொழியும், ஒவ்வொரு கனவும் 'வளர்ந்த பாரதத்திற்கு' அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, மும்பை மற்றும் தானே போன்ற நகரங்களை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும். இருப்பினும், முந்தைய காங்கிரஸ் அரசுகள் விட்டுச் சென்ற இடைவெளிகளை நிரப்பும் அதே வேளையில், நாம் வேகமாக வளர வேண்டும் என்பதால் நாம் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டும். 

இன்று, மும்பை பெருநகரப் பகுதியில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மரைன் டிரைவிலிருந்து பாந்த்ரா வரையிலான பயணம் இப்போது கடலோர சாலை வழியாக 12 நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அடல் சேது, தெற்கு மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான தூரத்தைக் குறைத்துள்ளது. 

நண்பர்களே,
காங்கிரஸ் எங்கு காலடி எடுத்து வைத்தாலும், அது அழிவுக்கே வழிவகுக்கிறது. நாட்டை வறுமையில் தள்ளிவிட்டனர்! அவர்கள் மகாராஷ்டிராவை அழித்தார்கள், அவர்கள் மகாராஷ்டிராவின் விவசாயிகளை அழித்தார்கள். எங்கெல்லாம் ஆட்சி அமைத்தார்களோ, அங்கெல்லாம் அந்த மாநிலத்தையும் அழித்து விட்டார்கள். அது மாத்திரமல்ல அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் அழிந்து போகின்றன. ஒரு காலத்தில் தேசியவாதம் பற்றி பேசியவர்கள் இப்போது திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

நாம் அனைவரும் இணைந்து மகாராஷ்டிராவின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், மேற்கொள்ளப்பட்டு வரும் ஏராளமான பணிகளுக்காகவும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். 

மிகவும் நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2062445&reg=3&lang=1

************************

BR/KV


(Release ID: 2062602) Visitor Counter : 53