விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் 18-வது தவணைத் தொகையை மகாராஷ்டிராவின் வாஷிமில் 2024 அக்டோபர் 05 அன்று பிரதமர் விடுவிக்கிறார்

நேரடி பரிமாற்றம் மூலம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை 9.4 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பெற்றப் பயனடைவார்கள்

மகாராஷ்டிரா மாநில அரசின் நமோ ஷேத்கரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் 5-வது தவணைத் தொகை விடுவிக்கப்படுகிறது

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் முடிக்கப்பட்ட 7516 திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது

சுமார் 9,200 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது

கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப், உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பம் அறிமுகம்

கிராம பஞ்சாயத்துகளுக்கு சமூக மேம்பாட்டு மானியத்தின் மின்னணு விநியோகம்

எம்.எஸ்.கே.வி.ஒய் 2.0-ன் கீழ் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சூரியசக்தி பூங்காக்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 04 OCT 2024 1:27PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் 18-வது தவணைத் தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024   அக்டோபர் 5-ம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிமில் விடுவிக்கிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், நாடு முழுவதும் 9.4 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் எந்தவொரு இடைத்தரகர்களின் ஈடுபாடும் இல்லாமல் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான நேரடி நிதிப் பலன்களைப் பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு அஜித் பவார், திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மண், நீர் பாதுகாப்பு அமைச்சர் திரு சஞ்சய் ரத்தோட் உள்ளிட்டோர் கலந்து  கொள்கின்றனர். வாஷிம், நாடு முழுவதும் உள்ள 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 5 லட்சம் பொதுச் சேவை மையங்கள் மூலம் சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் இணையதளம் மூலம் பங்கேற்பார்கள். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பிரதமர் கிசான் உத்சவ் திவாஸ் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

2019 பிப்ரவரி 24 அன்று பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டம் தொடங்கப்பட்டது. நில உரிமையாளர் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மூன்று சம தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் 18-வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி பிரதமர் விடுவிக்கிறார். 18-வது தவணை விடுவிக்கப்படுவதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி உதவி வழங்கல் ரூ.3.45 லட்சம் கோடியைத் தாண்டும். இது நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் விவசாய மேம்பாட்டுக்குமான அரசின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மகாராஷ்டிராவில், திட்டத்தின் 17 தவணைகளில் சுமார் 1.20 கோடி விவசாயிகளுக்கு சுமார் 32,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இரண்டாவது மிக உயர்ந்த தொகையாகும். 18-வது தவணையில், மகாராஷ்டிராவில்  சுமார் 91.51 லட்சம் விவசாயிகள் ரூ.1,900 கோடி பெறுவார்கள்.

இந்த 18-வது தவணைத் தொகை விநியோகத்துடன், மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் ஷேத்கரி மகாசன்மன் நிதி யோஜனாவின் 5-வது தவணையின் கீழ் மகாராஷ்டிராவின் விவசாயிகளுக்கு  சுமார் 2,000 கோடி    ரூபாய் கூடுதல் பலன்களையும் பிரதமர் விடுவிப்பார். 

மேலும், வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, புதிய அரசின் முதல் 100 நாட்களில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ், முடிக்கப்பட்ட பல திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.. 2020-ல் தொடங்கப்பட்ட வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு, சமூக விவசாய சொத்துக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடுத்தர முதல் நீண்ட கால கடன் நிதி வசதியாகும். இந்த திட்டம் தகுதியான கடன் வாங்குபவர்களுக்கு 3% வட்டி மானியத்தையும் கடன் உத்தரவாத வசதியுடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனையும் வழங்குகிறது. கடந்த 100 நாட்களில், நாடு முழுவதும் 10,066 க்கும் மேற்பட்ட வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6,541 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது (அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ.97.67 கோடியுடன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான 101 திட்டங்கள் உட்பட). கூடுதலாக, மொத்தம் ரூ.1,929 கோடி ஒப்புதலுடன் 7,516 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.13.82 கோடி மதிப்புள்ள 35 உற்பத்தியாளர் திட்டங்கள் அர்ப்பணிக்கப்படும். இந்தத் திட்டங்கள் வேளாண் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், சேமிப்பு, பதப்படுத்துதல், சரக்குப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுதல் என விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கும் கணிசமாக பயனளிக்கின்றன.

ஒரு வலுவான மதிப்பு விநியோகச் சங்கிலியை நிறுவுவதற்கும், சிறிய, குறு, நிலமற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் ஒவ்வொரு தொகுதியையும் உள்ளடக்கிய 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு மத்திய துறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இன்றுவரை, சுமார் 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, 8.3 லட்சம் பெண்கள், 5.77 லட்சம் எஸ்சி, எஸ்டி, பயனாளிகள் உட்பட 24 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் இப்போது 1,300 கோடி ரூபாய்க்கு மேல் வருடாந்திர வருவாயைக் கொண்டுள்ளன. அவை இந்த நிகழ்வின் போது பிரதமரால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும்.

பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம், 'தற்சார்பு இந்தியா' ஆகிய  தொலைநோக்குப் பார்வைகளுக்கு ஏற்ப, உள்நாட்டு பாலின வகை விந்து உற்பத்தி தொழில்நுட்பமும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மலிவு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பாலின வரிசைப்படுத்தப்பட்ட விந்து கிடைப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது ஒரு டோஸுக்கு சுமார் ரூ.200 செலவைக் குறைக்கிறது. கூடுதலாக, கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை (DAHD) உருவாக்கிய ஒருங்கிணைந்த மரபணு சிப், கால்நடைகளுக்கான 'கௌ சிப்', எருமைகளுக்கான 'மஹிஷ் சிப்' ஆகியவற்றை பிரதமர் அறிமுகப்படுத்துவார். இந்திய இனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த சிப், இளம் வயதிலேயே இளம், உயர்தர காளைகளை அடையாளம் காண்பதன் மூலம் கால்நடை தேர்வு குறித்து விவசாயிகள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். இது இந்தியாவில் பால் பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்தும்.

தொலைநோக்குப் சிந்தனையுடன் பார்க்கும் போது குசும்-சி திட்டத்தின் கீழ் சுமார் 3,000 மெகாவாட் விருது கடிதங்களை மின்னணு முறையில் விநியோகிப்பது, கிராம பஞ்சாயத்துகளுக்கு சமூக மேம்பாட்டு மானியங்களை மின்னணு முறையில் விநியோகிப்பது ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைப்பார். எம்.எஸ்.கே.வி.ஒய் 2.0-ன் கீழ், மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்கள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும், இது நிலையான மின் தீர்வுகளுக்கு பங்களிக்கும். அத்துடன்  விவசாயிகளுக்கு பகல்நேர மின்சாரம், நில குத்தகை மூலம் கூடுதல் வருமான ஆதாரத்தை வழங்குகிறது.

5 சூரிய பூங்காக்கள் பின்வருமாறு

(i) தோண்டல்கான், சா. சம்பாஜி நகர் - 3 மெகாவாட்

(ii) பாம்னி பிகே, நான்டெட் – 5 மெகாவாட்

(iii) கோண்ட்கிரி, கோலாப்பூர் – 3 மெகாவாட்

(iv) ஜலாலாபாத், அகோலா – 3 மெகாவாட்

(v) பல்ஷி பிகே, புல்தானா – 5 மெகாவாட்

----

(Release ID 2061923)

PLM/KPG/KR



(Release ID: 2062012) Visitor Counter : 22