தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தூய்மையே சேவை' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை முகாம்கள், துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு முகாம்கள் மற்றும் யோகா பயிற்சி அமர்வுகளுக்கு ஆகாஷ்வாணி ஏற்பாடு

Posted On: 03 OCT 2024 9:27AM by PIB Chennai

தூய்மையே சேவை 2024 இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வாணி 2024 அக்டோபர் 1-2 தேதிகளில், இரண்டு நாள் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை முகாம்கள், துப்புரவுப் பாதுகாப்பு முகாம்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான யோகா பயிற்சி அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இயக்கத்தின் கீழ், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், நமது தூய்மை வீரர்களுக்காக, இலவச கண், பல், மகளிர் மருத்துவம், தோல், இரைப்பை, குடல் மற்றும் பொது பரிசோதனைகளுக்கு பல மருத்துவமனைகள் ஏற்பாடு செய்திருந்தன.

துப்புரவு நண்பர்களின் ஆரோக்கியத்திற்காக ஆகாஷ்வாணி & தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் கைகோர்க்கின்றன

துப்புரவுப் பணியாளர்களுடன் நீண்டகால தொடர்புக்காக இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஃபரிதாபாத் (என்ஐடி) ஆகியவற்றுடன் ஒரு ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டது. இஎஸ்ஐசி இலவச ஆன்-தி-ஸ்பாட் பதிவு, பொது ஆலோசனைக்கான புறநோயாளி சீட்டுகள் மற்றும் பொது மருத்துவர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் எங்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளுக்கான பரிந்துரைகளை (தேவைக்கேற்ப) வழங்கியது. ஒவ்வொரு துப்புரவுப் பணியாளருக்கும் மித்ராவுக்கும் அவர்களின் அனைத்து மருந்துகளையும் பரிசோதனை அறிக்கைகளையும் ஒழுங்கமைக்க ஒரு மருத்துவ கோப்பு உருவாக்கப்பட்டது.

இலவச சுகாதார சோதனைகள் மற்றும் ABHA பதிவு

வளாகத்தில் பணிபுரிந்த 200 துப்புரவுத் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள், அவுட்சோர்சிங் ஓட்டுநர்கள் மற்றும் எம்.டி.எஸ் ஊழியர்களுக்கு டாக்டர் லால் பாத்லேப்ஸ் மூலம், ரத்தப் பரிசோதனை வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டன . அக்டோபர் 1 அன்று, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா மற்றும் ABHA அட்டைப் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நேரடி செயல்விளக்கத்தை வழங்கவும், பிரசார் பாரதியின் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்காக, தகுதியான பயனாளிகளுக்கு, ஆகாஷ்வாணி பவனில் புதிய சேர்க்கையுடன் ஒரு சாவடி அமைக்கப்பட்டது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் மோசடி விழிப்புணர்வு அமர்வு

துப்புரவுப் பணியாளர்களிடையே யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் மாணவர்கள் குழுவுடன் இணைந்து, அலுவலகங்களில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும், யோகா பயிற்சி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கூடுதலாக, கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைந்து, மோசடி விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 50 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு முகாமில் பெண் துப்புரவு நண்பர்களுக்கு இலவச மகப்பேறு பரிசோதனை

பாதுகாப்பு முகாமில், குருகிராமில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையுடன் இணைந்து, பெண் துப்புரவு நண்பர்களுக்கு இலவச மகளிர் மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்டது. இந்த முயற்சி, துப்புரவுத் தொழிலாளர்களிடையே பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த நிகழ்வு, முக்கிய சுகாதார சேவைகளை வழங்கியது மட்டுமல்லாமல், பெண்களின் சுகாதார பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது, துப்புரவுப் பணியாளர்களை அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளைப் பெறவும் ஊக்குவித்தது.

பாதுகாப்பு முகாமில் துப்புரவு நண்பர்களுக்கு இலவச கண் பரிசோதனை வசதி

எங்கள் துப்புரவுப்பணியாளர், சரியான 6/6 பார்வையை அடைவதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு முகாமின் போது M/s லாரன்ஸ் & மேயோவால் இலவச கண் பரிசோதனை வசதி வழங்கப்பட்டது. இந்த முயற்சி துப்புரவுத் தொழிலாளர்களிடையே கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது, அவர்களுக்கு அத்தியாவசிய பார்வை பராமரிப்புக்கான அணுகலை வழங்குகிறது.

ஆகாஷ்வாணி இயக்குநரகத்தில் தூய்மை செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது

 தூய்மையை மேம்படுத்தவும், தூய்மை இந்தியா இயக்கத்தில் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கவும், ஆகாஷ்வாணி இயக்குநரகத்தில்  'தூய்மை செல்பி பாயிண்ட்' நிறுவப்பட்டுள்ளது. இந்த ஈர்க்கக்கூடிய முயற்சி, ஊழியர்களையும் பார்வையாளர்களையும் செல்ஃபி எடுக்க அழைக்கிறது, தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில், பெருமை உணர்வை வளர்க்கிறது. #SwachhataSelfie என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் செல்ஃபிக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், பங்கேற்பாளர்கள், தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பலாம் மற்றும் இயக்கத்தில் சேர மற்றவர்களை ஊக்குவிக்கலாம்.

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், ஆகாஷ்வாணியின் முன்முயற்சிகள், துப்புரவுப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.   பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனை முகாம்கள், துப்புரவு பணியாளர் பாதுகாப்பு முகாம் மற்றும் யோகா பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆகாஷ்வாணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களிடையே சமூக உணர்வையும் ஆதரவையும் வளர்க்கிறது. இந்த முயற்சிகள் சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், இறுதியில் அனைவருக்கும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க பங்களிக்கின்றன.

***

(Release ID: 2061323)

MM/AG/KR


(Release ID: 2061433) Visitor Counter : 55