பிரதமர் அலுவலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்க செயல்பாடுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
தூய்மை தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தினார்
प्रविष्टि तिथि:
02 OCT 2024 9:39AM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களுடன் தூய்மை இயக்க செயல்பாடுகளில் பங்கேற்றார். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தூய்மை தொடர்பான நடவடிக்கைகளில் குடிமக்கள் இன்று பங்கேற்க வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது:
"இன்று, காந்தி ஜெயந்தி நன்னாளில், நான் எனது இளம் நண்பர்களுடன் தூய்மை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டேன். இதுபோன்ற ஏதாவது ஒரு செயலில் இன்று பங்கேற்குமாறும், அதே நேரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்துமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.#10YearsOfSwachhBharat "
---
RB/DL
(रिलीज़ आईडी: 2061049)
आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam