பாதுகாப்பு அமைச்சகம்
வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2024 12:42PM by PIB Chennai
அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின், அக்டோபர் 01, 2024 அன்று, ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்த உயர்பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆயுதப்படைகள் தொடர்பான ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அவர் நேரடியாக பொறுப்பு வகிப்பார்.
46-வது தலைமை இயக்குநராக நியமனத்தை ஏற்பதற்கு முன்பு, கொடி அதிகாரி மருத்துவ சேவைகள் (கடற்படை) தலைமை இயக்குநர், மருத்துவ சேவைகள் (விமானம்) தலைமை இயக்குநர் மற்றும் புனேவின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் உள்ளிட்ட மதிப்புமிக்க பொறுப்புக்களை அவர் வகித்தார். புனேவின் ஏ.எஃப்.எம்.சியின் முன்னாள் மாணவரான இவர், 1985 டிசம்பரில் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் நியமிக்கப்பட்டார். கதிரியக்க பிரிவில் பல பட்டங்களை அவர் பெற்றார்.
38 ஆண்டுகால மருத்துவ சேவையில் பல பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் முதல் கேப்டன் வரை, இந்திய கடற்படையில் சர்ஜன் லெப்டினன்ட் முதல் சர்ஜன் வைஸ் அட்மிரல் வரை, இந்திய விமானப் படையில் ஏர் மார்ஷல் வரை பணியாற்றிய கொடி அதிகாரி சரின் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவிலும் பணியாற்றிய அரிய பெருமையைப் பெற்றுள்ளார்.
நோயாளி பராமரிப்பில் உயர்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவரது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், கொடி அதிகாரிக்கு 2024-ல் அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் 2021 இல் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பான சேவைக்காக ராணுவத் தளபதி பாராட்டு (2017), கடற்படைத் தளபதி பாராட்டு (2001) மற்றும் பொது அதிகாரி கமாண்டிங் - இன்-சீஃப் பாராட்டு (2013) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
மருத்துவ நிபுணர்களுக்கான பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதற்காக கொடி அதிகாரி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் தேசிய பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இளம் பெண்களை ஆயுதப் படைகளில் சேர ஊக்குவிப்பதில் அவர் முன்னணியில் உள்ளார் மற்றும் அரசின் நாரி சக்தி முன்முயற்சியின் பிரகாசமான அடையாளமாக அவர் திகழ்கிறார்.
----
PKV/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2060624)
வருகையாளர் எண்ணிக்கை : 144