பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
प्रविष्टि तिथि:
22 SEP 2024 7:27AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு திரு. அந்தோணி அல்பானீஸும் அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெற்ற 6-வது குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே சந்தித்தனர். இது மே 2022 முதல், இது, அவர்களின் ஒன்பதாவது நேரடி சந்திப்பாகும்.
அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரிவு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் பிரதமர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அடிக்கடி நடைபெறும் உயர்மட்ட தொடர்புகள் இருதரப்பு உறவுகளுக்கு வலுவான உத்வேகத்தை அளித்துள்ளது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பன்னாட்டு அரங்குகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் புதுப்பித்ததுடன், இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்..
*****
BR/ KV/DL
(रिलीज़ आईडी: 2059161)
आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam