பிரதமர் அலுவலகம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சூர்யகாந்த வியாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2024 7:42PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் சூர்சாகரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சூர்யகாந்த வியாஸ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சூர்சாகரில் பொதுமக்கள் நலனுக்கான அவரது பணிகளுக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ராஜஸ்தான் மாநிலம் சூர்சாகரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிஜேபி மூத்தத் தலைவருமான திருமதி சூர்யகாந்த வியாஸ் மறைவால் மிகவும் துயருற்றேன். இந்தப் பகுதியில் அவரின் மக்கள் நலப்பணிக்காக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார். அண்மையில் ஜோத்பூர் பயணத்தின்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். தனிச்சிறப்பாக அவர் விமான நிலையத்திற்கு வந்திருந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சோகமான தருணத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஓம் சாந்தி! "
***
SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2058820)
வருகையாளர் எண்ணிக்கை : 76
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam