இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவை மூலம் கற்றுக் கொள்ளுங்கள் திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரமளித்து சமூகத்தில் இரக்கம் மற்றும் சேவை கலாச்சாரத்தை வளர்க்கிறது

Posted On: 25 SEP 2024 2:54PM by PIB Chennai

இந்தியாவின் இளைஞர்களை ஈடுபடுத்தவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை, மை பாரத் முன்முயற்சியின் கீழ் "சேவை மூலம் கற்றுக்கொள்ளுங்கள்” (சேவா சே சீகென்) திட்டத்தை தொடங்கியுள்ளது.  2024  செப்டம்பர் 17, அன்று தொடங்கப்பட்டது. இந்த நாடு தழுவிய தன்னார்வ முயற்சி, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முக்கியமான உதவியை வழங்கும் அதே நேரத்தில், இளைஞர்களுக்கு கற்றல் அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(சத்தீஸ்கர்)

இந்த திட்டம் குறித்து பேசிய மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் அதே நேரத்தில், சேவை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது. இந்த திட்டத்தின் மூலம், எங்கள் இளம் மை பாரத் தன்னார்வலர்கள், நமது தேசத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் போது, விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

(ராஜஸ்தான்)

திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை உட்பட மொத்தம் 700 இடங்களில் மை பாரத் தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மருத்துவமனையும் 10-20 தன்னார்வலர்களை வழங்குவதால், இந்த முயற்சி நோயாளி சேவைகளை மேம்படுத்துவதை மட்டுமல்லாமல், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை அணுக உதவுவது முதல், வெளிநோயாளர் துறை கவுண்டர்களை நிர்வகித்தல், தகவல் மேசைகளை இயக்குதல் மற்றும் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் ஆவணங்களை பராமரித்தல் வரை தன்னார்வலர்கள் பல்வேறு பணிகளுக்கு உதவுகிறார்கள்.

(குஜராத்)

"சேவா சே சீக்கன்" திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, 861 மருத்துவமனைகள் ஏற்கனவே மை பாரத் போர்ட்டலில் இணைந்துள்ளன. இந்த வசதிகள் 304 அனுபவ கற்றல் திட்டங்களையும், 2,649 தன்னார்வ வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

தற்போது, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 319 மருத்துவமனைகளில், 1732 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர். குஜராத் 33 மருத்துவமனைகளில் 273 தன்னார்வலர்களை நிறுத்தி முன்னிலையில் உள்ளது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்கள் முக்கியமான சுகாதார சேவைகளை ஆதரிக்கும் தன்னார்வலர்களின் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன.

(ஒடிசா)

இத்தகைய அர்த்தமுள்ள பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம், "சேவா சே சீகென்" திட்டம் சேவை மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது PM-JAY சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க முற்படுகிறது, இதன் மூலம் பின்தங்கிய சமூகங்களுக்கு சுகாதார அணுகலை மேம்படுத்துகிறது. இந்த முயற்சியின் வெற்றி நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும். சமூக பொறுப்புள்ள புதிய தலைமுறை தலைவர்களை வளர்ப்பதுடன் பொது சேவையின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும்.

மை பாரத் அதன் வரம்பை தொடர்ந்து விரிவுபடுத்துவதாலும், "சேவா சே சீகென்" திட்டம் வளர்ந்து வருவதாலும், இந்த முயற்சி இந்தியா முழுவதும் சுகாதார ஆதரவு மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டிலும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறது.

*****

(Release ID: 2058571)

MM/KPG/KR


(Release ID: 2058649) Visitor Counter : 41