WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய ஊடகங்கள், பொழுதுபோக்கு சங்கமும் இணைந்து வேவ்ஸ் அனிமே, மங்கா போட்டியை நடத்துகின்றன

 Posted On: 24 SEP 2024 5:36PM |   Location: PIB Chennai

இந்தியாவில்  அனிமே (ஜப்பான் பாணியிலான அனிமேஷன்), மங்கா (ஜப்பான் பாணியிலான காமிக்ஸ்) கலாச்சாரத்தை  பிரபலப்படுத்தும் முக்கிய முன்முயற்சியாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய ஊடகங்கள், பொழுதுபோக்கு சங்கமும் இணைந்து வேவ்ஸ் அனிமே, மங்கா போட்டியை நடத்துகின்றன. இந்திய ரசிகர்களிடையே ஜப்பானின் அனிமே, மங்கா மீது ஆர்வத்தை வளர்ப்பதையும், உள்ளூர் திறமையை வெளிக்கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச ரசிகர்கள் பிரபலமான ஜப்பானிய கலை வடிவங்களை உருவாக்குவதற்கு  தனித்துவ வாய்ப்பை இது வழங்கும். இந்தப் போட்டி, 3 வகைமைகளை கொண்டிருக்கும். இவற்றில் தனிநபர்கள் அல்லது அணிகள் (4 பேர் வரை) போட்டியிடலாம். முதல் நிலையில் மாநில அளவில் 11 நகரங்களிலும், இறுதி நிலையில் தேசிய அளவிலும் போட்டிகள் நடத்தப்படும்.

சென்னை, கோஹிமா, கொல்கத்தா, புவனேஸ்வர், வாரணாசி, தில்லி ஆகிய இடங்களில்  நவம்பர் மாதத்திலும், மும்பை, அகமதாபாத், நாக்பூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் டிசம்பர் மாதத்திலும் போட்டிகள் நடத்தப்படும்.  சென்னையில் 2024 நவம்பர் 10 அன்று போட்டி நடைபெறும்.  மாநில அளவிலான போட்டிக்கு பதிவு செய்வது போட்டி நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கும். இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெறும்.

வேவ்ஸ் அனிமே, மங்கா போட்டிக்கு www.meai.in/wam என்ற இணையத்தளத்தில் போட்டியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அனைத்து வகைப் போட்டிகளுக்கும் கட்டணம் இல்லை.

தேசிய அளவிலான இறுதிப்போட்டி தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2025 பிப்ரவரி 5 முதல் 9 வரை நடைபெறும். தகவல் ஒலிபரப்பு  அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜப்பான் செல்வதற்கான அனைத்து செலவுத் தொகையையும் வெற்றியாளர்கள்  பெறுவார்கள்.

இத்தகைய போட்டிகள் மூலம் இந்தியாவின் திறமை உலக அரங்கில் வெளிப்படும் என்று தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058285  

***

SMB/RS/DL


Release ID: (Release ID: 2058361)   |   Visitor Counter: 90