நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைபேசி மற்றும் மின்னணுவியல் துறையில் பழுதுபார்க்கும் திறன் குறியீட்டு கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு குழு அமைத்தது

Posted On: 24 SEP 2024 3:14PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை பழுதுபார்க்கும் குறியீட்டிற்கான வலுவான கட்டமைப்பை பரிந்துரைக்கவும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், தொழில்நுட்பத் துறையில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தவும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு பாரத் கெரா தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. பழுதுபார்க்கும் குறியீட்டை உருவாக்குவதன் மூலம், நுகர்வோர் விவகாரங்கள் துறை, நுகர்வோருக்கு, அவர்களின்  பொருட்களுக்கான பழுதுபார்ப்பு தகவல்களின் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்கவும், மேலும் நிலையான தொழில்நுட்பத் துறையை வளர்க்கவும் முயல்கிறது.

நுகர்வோர் உரிமைகள் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, 2024, ஆகஸ்ட் 29, அன்று நடைபெற்ற கைபேசி  மற்றும் மின்னணு துறையில் பழுதுபார்ப்பதற்கான உரிமை குறித்த தேசிய பயிலரங்கு, பழுதுபார்க்கும் குறியீட்டிற்கான கூறுகளை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பின் அடிப்படையில் ஒருமித்தக் கருத்தை உருவாக்க தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்துள்ளது. தயாரிப்பு வடிவமைப்பை நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளல் மற்றும் பழுதுபார்ப்பு தகவல்களுக்கான அணுகலை பரவலாக்குதல் மற்றும் தயாரிப்புகள் நிறுத்தப்பட்ட பின்னரும் உதிரி பாகங்கள் கிடைப்பது போன்றவை குறித்தும் கட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கைபேசி மற்றும் மின்னணு வேகமாக வளர்ந்து வரும் தேவை மற்றும் குறுகிய ஆயுட்காலம் கொண்டவை என்று கருதப்படுகிறது. பயிலரங்கில் நடந்த விவாதத்தின் போது, பழுதுபார்ப்பு குறியீட்டின் கட்டமைப்பு, நுகர்வோருக்கு பொருள் தயாரிப்பு பழுதுபார்ப்பு பற்றிய அத்தியாவசிய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, மேலும் உதிரி பாகங்களுக்கு தடையற்ற அணுகல் கொள்முதல் முடிவுகளை செயல்படுத்தும் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பழுதுபார்க்கும் திறன் குறியீடு என்பது நுகர்வோரை மையமாகக் கொண்ட குறியீட்டு முறையாகும், இது நுகர்வோர் அதன் பழுதுபார்க்கும் தன்மையின் அடிப்படையில் தயாரிப்பு தொடர்பான முடிவை எடுக்க உதவுகிறது. மேலும், பழுதுபார்க்கும் திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை இது தரப்படுத்த முடியும், இது பழுதுபார்க்கும் குறியீட்டின் அடிப்படையில் தயாரிப்புகளை ஒப்பிடுவதை நுகர்வோருக்கு எளிதாக்குகிறது, இதன் மூலம் கைபேசி மற்றும் மின்னணு தயாரிப்புகளில் தகவலறிந்த தேர்வுகளின் சூழல் அமைப்பை உருவாக்குகிறது.

பழுதுபார்க்கும் திறனின் மதிப்பீட்டை தரப்படுத்துவதன் மூலம், நுகர்வோர் தயாரிப்புகளை எளிதாக ஒப்பிட்டு, தயாரிப்புகளின் கவனமான நுகர்வு மற்றும் நிலைத்தன்மையின் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகும் விருப்பங்களைத் தேர்வுசெய்யக்கூடிய ஒரு சூழல் அமைப்பை இந்த குறியீடு உருவாக்கும்.

 

IR/KPG/KR/DL


(Release ID: 2058300) Visitor Counter : 46