சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க, புகையிலை இல்லாத இளைஞர் இயக்கம் 2.0 ஐ, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்
Posted On:
24 SEP 2024 3:27PM by PIB Chennai
லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் புகையிலையற்ற இளைஞர் இயக்கம் 2.0-ன் இரண்டாவது பகுதியை இன்று தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் புகையிலை நிறுத்த மையங்களையும் அவர் காணொலி முறையில் திறந்து வைத்தார். புகையிலையின் தீங்கு விளைவுகளிலிருந்து இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதே இயக்கத்தின் நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதாப்ராவ் ஜாதவ், "இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கின்றனர்" என்று கூறினார். "புகையிலை இளைஞர்களிடையே ஒரு நவீன கலாச்சாரமாக மாறியுள்ளது, ஆனால், இது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.
புகையிலை பயன்பாட்டை விட தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க இளைஞர்களை ஊக்குவித்த திரு ஜாதவ், "நல்ல ஆரோக்கியம் என்பது ஒருவரின் சொந்த மற்றும் மற்றவர்களின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது" என்று கூறினார். நாட்டின் வளர்ச்சி அதன் இளம் மக்களின் ஆரோக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் புகையிலையை எதிர்க்கவும் கைவிடவும் உறுதியளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை பெரியவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டின் 60 நாள் இயக்கம் ஐந்து முக்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் கூறினார்:
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே புகையிலையின் அபாயங்கள் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரித்தல்;
புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களுக்கான (ToFEI) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை மேம்படுத்துதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை புகையிலையிலிருந்து விடுவித்தல்;
புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை அமல்படுத்துவதை வலுப்படுத்துதல், புகையிலையற்ற கிராமங்களை ஊக்குவித்தல், அங்கு சமூகங்கள் புகையிலையை அகற்றி ஆரோக்கியமான சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுதல் புகையிலையின் தீங்குகள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய வலுவான செய்திகளை வழங்க சமூக ஊடக டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல்.
அனைத்து பங்கேற்பாளர்களும் புகையிலை நுகர்வு இல்லாததாக இருக்க 'புகையிலை வேண்டாம் என்று சொல்லுங்கள்' என்ற உறுதிமொழியை எடுத்தனர், அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற புகைப்பட அமர்வு நடைபெற்றது.
***
IR/KPG/K/DL
(Release ID: 2058296)
Visitor Counter : 47