தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜூலை மாதத்திற்கான இபிஎஃப்ஓ-வில் தற்காலிக தரவுகளை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்
உறுப்பினர் சேர்க்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், கர்நாடகா ஆகியவை முன்னிலை வகிக்கின்றன
Posted On:
23 SEP 2024 3:08PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று ஜூலை மாதத்திற்கான இபிஎஃப்ஓ தற்காலிக ஊதிய தரவுகளை வெளியிட்டார். ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஜூலை மாதத்தில் மட்டும் 19.94 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக அவர் கூறினார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.
ஜூலை மாதத்தில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்களை இபிஎஃப்ஓ சேர்த்துள்ளது. இது ஜூன் மாதத்தைக் காட்டிலும் 2.66 சதவீதம் அதிகமாகும். வேலைவாய்ப்புகள், ஊழியர்களுக்கான பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றால் இந்த எண்ணிக்கை அதிகமானது. ஜூலை மாதத்தில் சுமார் 14.65 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி மீண்டும் இபிஎஃப்ஓ அமைப்பில் சேர்ந்துள்ளனர். இபிஎஃப்ஓ அமைப்பில் ஜூலை மாதத்தில் 3.05 லட்சம் புதிய பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.94 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஜூலை மாதத்தில் 59.27 சதவீதம் கூடுதல் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 20.21 சதவீதம் கூடுதல் உறுப்பினர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
***
(Release ID: 2057831)
PKV/RR/KR
(Release ID: 2057904)
Visitor Counter : 42