உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உலக உணவு இந்தியா 2024" என்ற 4 நாள் மெகா நிகழ்வு புதுதில்லியில் நாளை தொடங்குகிறது
Posted On:
18 SEP 2024 2:16PM by PIB Chennai
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் உலக உணவு இந்தியா 2024-ஐ நடத்த உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வு, செப்டம்பர் 19-22, 2024 வரை 90-க்கும் மேற்பட்ட நாடுகள், 26 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 18 மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய அரசு அமைப்புகளின் பங்கேற்பைக் காணும். உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய ஒருங்கிணைப்பாக இந்த நிகழ்வு இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
உலக உணவு இந்தியா 2024-க்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MoFPI) உள்நாட்டு மற்றும் உலகளாவிய பங்கேற்பாளர்களுக்கு உண்மையிலேயே விதிவிலக்கான அனுபவத்தை வழங்குவதற்கான தயாரிப்புகளை இறுதி செய்து வருகிறது. இந்த ஆண்டின் நான்கு நாள் நிகழ்வு, ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது, இது உணவு பதப்படுத்துதலில் உலகளாவிய அதிகார மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கலந்து கொள்வார்; மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான், மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு. ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். திரு சிராக் பாஸ்வான் மற்றும் ஸ்ரீ ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் தொழில்துறை தலைவர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவதுடன் வெளிநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு ஜி 2 ஜி சந்திப்புகளை நடத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது உணவு பதனப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் உரையாற்றுவார். அதே நேரத்தில் இந்தியாவில் உணவு பதனப்படுத்தும் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அரசின் முன்முயற்சிகள் மற்றும் எதிர்கால திட்டங்களை எடுத்துரைக்கிறார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் திரு சிராக் பாஸ்வான் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கும் இந்த நிகழ்வின் முதல் நாளில் உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரி அளவிலான வட்டமேஜையும் நடைபெறும். ரவ்னீத் சிங் பிட்டு தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
கூடுதலாக, APEDA, MPEDA மற்றும் கமாடிட்டி போர்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்குபவர் விற்பவர் சந்திப்பில், 1000-க்கும் மேற்பட்ட வாங்குபவர்களின் வலுவான இருப்பைக் காணும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய உலகளாவிய உணவு கட்டுப்பாட்டாளர்கள் உச்சி மாநாட்டின் 2வதுபதிப்பு, உலக உணவு இந்தியாவுடன் இணைந்து 20-21செப்டம்பர்2024 முதல் நடைபெறுகிறது. உலக உணவு இந்தியா 2024-ன் பங்குதாரர் நாடாக ஜப்பான் இருக்கும். கூடுதலாக, வியட்நாம் மற்றும் ஈரான் கவனம் செலுத்தும் நாடுகளாக பங்கேற்கும்.
இந்த நிகழ்வு, கருப்பொருள் விவாதங்கள், மாநில மற்றும் நாடு சார்ந்த மாநாடுகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட அறிவுசார் அமர்வுகளை நடத்தும். மேலும், உலகளாவிய வேளாண்-உணவு நிறுவனங்களின் 100-க்கும் மேற்பட்ட தலைமை செயல் அதிகாரிகளுடன் தொழில்துறை தலைமையிலான குழு விவாதங்களும் நடைபெறும்.
தொடக்க விழா, மூத்த கொள்கை வகுப்பாளர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுக்கு ஒரு எழுச்சியூட்டும் தொனியை அமைக்க உறுதியளிக்கிறது. உணவுத் துறையின் அம்சங்களை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்குகளில் இந்தக் கண்காட்சி நடைபெறும். சர்வதேச அரங்குகள், மாநில மற்றும் மத்திய அமைச்சகங்களின் அரங்குகள், செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உணவு அரங்கு ஆகியவை இதில் இடம்பெறும். அரங்கம் 14-ல் உணவுப் பதனப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் முன்முயற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தால் எடுத்துரைக்கப்படும். கூடுதலாக, ஆட்டோமேஷன், உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான பேக்கேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். உணவு பதப்படுத்துதலில் அதிநவீன கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்ப அரங்கு இருக்கும். இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் உணவு சேவை உபகரணங்களில் சமீபத்திய முன்னேற்றங்களைக் காண்பிப்பதற்கான பிரத்யேக இடம் இருக்கும்.
உலக உணவு இந்தியா 2024-ன் ஈர்ப்பை விரிவுபடுத்த, அமைப்பாளர்கள் ஸ்வத் சூத்ரா என்ற சமையல் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர், இது இந்தியா முழுவதிலுமிருந்து பிராந்திய உணவுகளைக் காட்சிப்படுத்துகிறது.
உணவுப் பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் , தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்களைத் தூண்டவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், உலக உணவுத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நிகழ்வை வழங்க உள்ளது.
***
(Release ID: 2055950)
MM/RR
(Release ID: 2056037)
Visitor Counter : 96