குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 வரை பாரதிய கலா மஹோத்சவத்தை குடியரசுத் தலைவர் மாளிகை நடத்தவுள்ளது

Posted On: 17 SEP 2024 6:01PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, குடியரசுத் தலைவர் மாளிகை, பாரதிய கலா மஹோத்சவத்தின் முதல் பதிப்பை, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6, 2024 வரை நடத்தும். குடியரசுத் தலைவர் செப்டம்பர் 28, 2024 அன்று மஹோத்சவத்தை தொடங்கி வைக்கிறார்.

 

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டம், நமது வடகிழக்கு மாநிலங்களின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் சமையல் பன்முகத்தன்மையை பார்வையாளர்கள் அறிந்து கொள்வார்கள். இந்த மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

 

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6, 2024 வரை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மக்கள் மஹோத்சவத்தைப் பார்வையிடலாம். பார்வையாளர்கள் https://visit.rashtrapatibhavan.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மஹோத்ஸவத்திற்கு அனுமதி இலவசம். குடியரசுத் தலைவர் மாளிகை, போலாரம், செகந்திராபாத்திற்கு நேரடியாகச் செல்லும் பார்வையாளர்களுக்கு ஆன்-தி-ஸ்பாட் முன்பதிவு வசதி கிடைக்கும்.

 

***

(Release ID: 2055681)
MM/RR/KR


(Release ID: 2055888) Visitor Counter : 33