பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி

Posted On: 17 SEP 2024 10:53PM by PIB Chennai

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு திரு. மோடி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

 

"பிரதமர் @GiorgiaMeloni உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. உலகளாவிய நன்மைக்காக இந்தியாவும் இத்தாலியும் தொடர்ந்து ஒத்துழைக்கும்.

 

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பதிலளித்த திரு மோடி,

 

"பிரதமர் @kpsharmaoli உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நமது இருதரப்பு கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்ல உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்."

 

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்துக்கு திரு. மோடி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

 

"பிரதமர் @KumarJugnauth உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் செய்தியையும் மிகவும் பாராட்டுகிறேன். நமது மக்கள் மற்றும் மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான முயற்சிகளில் மொரீஷியஸ் எங்கள் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

 

***



(Release ID: 2055856)


(Release ID: 2055878) Visitor Counter : 38