பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜீவன் பிரமான் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிக்கும் டில்சி இயக்கம் நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெறும்

प्रविष्टि तिथि: 13 SEP 2024 12:02PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தை (DLC 3.0) வெற்றிகரமாக நடத்துவதற்கு ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நலச் சங்கங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவற்றுடன் இணைந்து 2022, 2023-ம் ஆண்டுகளில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களை ஓய்வூதியர் நலத்துறை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

2023-ம் ஆண்டில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 100 நகரங்களில் நடைபெற்றது. இதில் 1.45 கோடி ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். மூன்றாம் கட்ட டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம், 2024 நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெறும் என்று ஓய்வூதியதாரர்கள் நலத் துறை அறிவித்துள்ளது.

இந்த இயக்கம், அனைத்து மாவட்ட தலைமையகங்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நலச் சங்கங்கள், தனித்துவ அடையாள அட்டை ஆணையம்,  ஜீவன் பிரமான் ஆகியவை 157 நகரங்களில் இந்த இயக்கத்தை நடத்தும்.

அனைத்து மாவட்ட தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தக் கூட்டம் 12.9.2024 அன்று அஞ்சல் சேவைகள் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் சரண் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054424

****

PLM/RS/KR


(रिलीज़ आईडी: 2054496) आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi