புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை இயக்கம்: 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ. 2,000 கோடி மதிப்பில் முக்கிய முன்முயற்சி

Posted On: 13 SEP 2024 12:05PM by PIB Chennai

புவி அறிவியல் அமைச்சகம் (MoES) புதுதில்லியில் உள்ள பிரித்வி பவனில் மிஷன் மௌசம்  எனப்படும் வானிலை இயக்கம் குறித்த தேசிய அளவிலான பத்திரிகை விளக்க நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா, நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்பு தேசிய மையத்தின் தலைவர் டாக்டர் வி.எஸ்.பிரசாத் ஆகியோர் ஊடகங்களிடம் பேசினர்.

இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில்,  2024 செப்டம்பர் 11 அன்று மத்திய அமைச்சரவை மிஷன் மவுசம் எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது மத்திய அரசின் லட்சிய முயற்சியாகும். இது இந்தியாவை வானிலை முன்னறிவிப்பில் நவீனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணி நாட்டின் வானிலை, பருவநிலை முன்னறிவிப்பை வேகமாக மேம்படுத்தும் நடவடிக்கையாகும்.

முன்மொழியப்பட்டவானிலை இயக்கத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:

 

  • அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், அமைப்புகளை உருவாக்குதல்
  • சிறந்த தற்காலிக, இடஞ்சார்ந்த வளிமண்டல  கணிப்புகளை செயல்படுத்துதல்
  • ·அடுத்த தலைமுறை ரேடார்கள், மேம்பட்ட கருவி பேலோடுகளுடன் செயற்கைக்கோள்களை செயல்படுத்துதல்
  • வானிலை, பருவநிலை செயல்முறைகள், முன்கணிப்பு திறன்களின் புரிதலை மேம்படுத்துதல்
  • மேம்படுத்தப்பட்ட புவி அமைப்பு மாதிரிகள், தரவு முறைகள் ஆகியவற்றை உருவாக்குதல்
  • வானிலை மேலாண்மைக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
  • கடைசி மைல் இணைப்பிற்கான அதிநவீன பரவல் அமைப்பை உருவாக்குதல்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054427

*****

PLM/RS/KR


(Release ID: 2054487) Visitor Counter : 91