தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் குறும்பட போட்டி, 2024-க்கான உள்ளீடுகளை அனுப்புவதற்கான கடைசி தேதியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீட்டித்துள்ளது
Posted On:
11 SEP 2024 4:41PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), அதன் 10-வது வருடாந்திர மனித உரிமைகள் குறும்பட போட்டி, 2024-க்கான உள்ளீடுகளை அனுப்புவதற்கான கடைசி தேதியை 2024, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
குறும்பட விருதுகள் வழங்கும் திட்டம் 2015-ம் ஆண்டில் ஆணையத்தால் நிறுவப்பட்டது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், இந்திய மக்களின் வயது வித்தியாசமின்றி, அவர்களின் சினிமா மற்றும் படைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதும், அங்கீகரிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு முந்தைய அனைத்து போட்டிகளிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆணையம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறும்படங்கள் ஆங்கிலம் அல்லது எந்த இந்திய மொழியிலும் ஆங்கிலத்தில் வசனங்களுடன் இருக்கலாம். குறும்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் மற்றும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும். குறும்படம் ஒரு ஆவணப்படமாகவோ, உண்மையான கதைகளின் நாடக மயமாக்கலாகவோ அல்லது புனைகதை படைப்பாகவோ இருக்கலாம். அனிமேஷன் உட்பட எந்த தொழில்நுட்ப படப்பிடிப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பு வடிவத்திலும் படம் இருக்கலாம்.
குறும்படங்களின் கருப்பொருள்கள், பல்வேறு சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். திரைப்படம் ஒரு ஆவணப்படமாகவோ, உண்மையான கதைகளின் நாடகமயமாக்கலாகவோ அல்லது அனிமேஷன் உட்பட எந்தவொரு தொழில்நுட்ப வடிவத்திலும், பின்வருவனவற்றின் எல்லைக்குள் புனைகதை படைப்பாகவோ இருக்கலாம்:
• வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம்
கொத்தடிமைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை உள்ளடக்குதல்,
• முதியோரின் சவால்களில் உரிமைகள்
• மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள்
• கைகளால் கழிவுகளை அகற்றுதல், சுகாதாரத்திற்கான உரிமை
• அடிப்படை சுதந்திரங்களின் பிரச்சனைகள்
• மனித கடத்தல்
• குடும்ப வன்முறை
• போலீஸ் அட்டூழியங்களால் ஏற்படும் மனித உரிமை மீறல்
• காவல் வன்முறை மற்றும் சித்திரவதை
• சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
• நாடோடி மற்றும் சீர்மரபினர் உரிமைகள்
• சிறை சீர்திருத்தம்
• கல்வி உரிமை
• பூமியில் உயிர்களை பாதிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமை
• வேலை செய்யும் உரிமை
• சட்டத்தின் முன் அனைவரும் சமம்
• உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான உரிமை
• LGBTQI+ உரிமைகள்
• மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரழிவு காரணமாக ஏற்படும் இடப்பெயர்வு காரணமாக மனித உரிமை மீறல்
• இந்திய பன்முகத்தன்மையில் மனித உரிமைகள் மற்றும் மதிப்புகளைக் கொண்டாடுதல்
• வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற மேம்பாட்டு முயற்சிகள்.
போட்டியில் பங்கேற்க, ஒரு நபர் அனுப்பக்கூடிய உள்ளீடுகளின் நுழைவுக் கட்டணம் அல்லது எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏதும் இல்லை. இருப்பினும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பூர்த்தி செய்யப்பட்ட நுழைவு படிவத்துடன் அனுப்ப வேண்டும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், நுழைவு படிவத்துடன், NHRC இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்: www.nhrc.nic.in அல்லது இணைப்பு:இங்கே கிளிக் செய்யவும்.
படம், முறையாக தாக்கல் செய்யப்பட்ட நுழைவு படிவம் மற்றும் பிற தேவையான ஆவணங்களை nhrcshortfilm[at]gmail[dot]com-ல் Google Drive ஐப் பயன்படுத்தி அனுப்பலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
****
MM/RS/DL
(Release ID: 2053855)
Visitor Counter : 44