பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

சமூக மாற்றத்திற்கான அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நோக்க ஆவணத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் யுனிசெப் அமைப்பும் கையெழுத்திட்டன

Posted On: 06 SEP 2024 12:25PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) இந்தியா ஆகியவை அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், சமூக மாற்றத்திற்காக சமூகங்களை ஈடுபடுத்துவதற்கும் ஒத்துழைக்க ஒரு நோக்க ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் களப்பணியாளர்கள் மற்றும் ஊரக சமுதாயங்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்புக்கான வழிமுறைகளை அமைத்து நிறுவனமயமாக்குவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மக்களுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்துவதன் மூலமும், கிராமப்புற மக்களுக்கு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதன் மூலமும் உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த இந்த ஒத்துழைப்பு உதவும்.

 

தகவல் தொடர்பு மற்றும் பின்னூட்ட முறைகளை மேம்படுத்துவதன் மூலம், முக்கியமான அரசின் கொள்கைகள் கிராமப்புறங்களை விரைவாகவும் திறம்படவும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இந்த முயற்சி கிராமப்புற மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மேலும் உள்ளடக்கிய மற்றும் இணைக்கப்பட்ட கிராமப்புற இந்தியாவுக்கு பங்களிக்கவும் உதவும்.

***

(Release ID: 2052459)

PKV/RR



(Release ID: 2052470) Visitor Counter : 44