பிரதமர் அலுவலகம்

முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி

Posted On: 05 SEP 2024 1:21PM by PIB Chennai

மதிப்பிற்குரிய பிரமுகர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனதருமை நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். முதலாவது சர்வதேச சூரியசக்தி விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அற்புதமான முன்முயற்சிக்காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்கள். வேதங்களில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று சூரியனைப் பற்றியது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் பாராயணம் செய்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் சூரியனுக்கு தங்கள் வழிகளில் மரியாதை அளிக்கின்றனர். மதிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சூரியனுடன் தொடர்புடைய திருவிழாக்களும் உள்ளன. இந்த சர்வதேச சூரிய திருவிழா சூரியனின் தாக்கத்தை கொண்டாட உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறது. இது ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க உதவும் ஒரு திருவிழா.

நண்பர்களே,

201-ல், சர்வதேச சுரிய கூட்டமைப்பு ஒரு சிறிய மரக்கன்றாகத் தொடங்கியது, அது நம்பிக்கை மற்றும் விருப்பங்களின் தருணமாக இருந்தது. இன்று அது கொள்கை மற்றும் நடவடிக்கையால்  ஈர்த்து மாபெரும் மரமாக வளர்ந்து வருகிறது. மிகக் குறுகிய காலத்தில், சர்வதேச சூரிய கூட்டமைப்பில்  நூறு உறுப்பு நாடுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளன. மேலும் 19 நாடுகள் முழு உறுப்புரிமை பெறுவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. 'ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே மின்தொகுப்பு' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இந்த அமைப்பின் வளர்ச்சி முக்கியமானது.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், பசுமை எரிசக்தியில் இந்தியா பல பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது. எங்கள் நாடுதான், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பாரீஸ் மாநாட்டில் உறுதிமொழிகளை நிறைவேற்றிய முதல் ஜி20 நாடாகும். சூரிய எரிசக்தியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இதை சாத்தியமாக்குவதில் ஒரு முக்கிய காரணம்.  கடந்த 10 ஆண்டுகளில் நமது சூரிய எரிசக்தி திறன் 32 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வேகமும், அளவும் 2030-ம் ஆண்டுக்குள் 500 கிகாவாட் புதைபடிவம் அல்லாத திறனை எட்ட உதவும்.

நண்பர்கள்

சூரிய எரிசக்தித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி தெளிவான அணுகுமுறையின் விளைவாகும். இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி, விழிப்புணர்வு,  சூரிய எரிசக்தி கிடைக்கும் தன்மை மற்றும் குறைவான விலை ஆகியவை சூரிய சக்தி பயன்பாடு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகும். சூரிய சக்தித் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான எரிசக்தி ஆதாரங்களின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கிறது. குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம், சூரிய எரிசக்தி  தேர்வை குறைந்த செலவு கொண்டதாக ஆக்கினோம்.

நண்பர்களே,

சூரிய எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கான சிறந்த தளமாக  சர்வதேச சூரிய கூட்டமைப்பு திகழ்கிறது. இந்தியாவிடமும் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. சமீபத்திய கொள்கை தலையீட்டிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தை தொடங்கினோம். இந்த திட்டத்தில், 750 பில்லியன் ரூபாயை முதலீடு செய்கிறோம். 10 மில்லியன் குடும்பங்கள் தங்கள் சொந்த கூரை வீடுகளில் சூரிய தகடுகளைப் பொருத்த உதவுவதே எங்கள் இலக்காகும். மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கி வருகிறோம். கூடுதல் நிதி தேவைப்பட்டால், குறைந்த வட்டி, பிணையமில்லா கடன்களும் வழங்கப்படுகின்றன. தற்போது, இந்த வீடுகள் தங்கள் தேவைகளுக்கு தூய்மை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மேலும், அவர்கள் அதிகப்படியான மின்சாரத்தை மின் தொகுப்பிற்கு விற்று பணம் சம்பாதிக்க முடியும். ஊக்கத்தொகை மற்றும் சாத்தியமான வருவாய் காரணமாக, இந்த திட்டம் பிரபலமடைந்து வருகிறது. சூரிய எரி சக்தி ஒரு  குறைந்த செலவுமிக்க மற்றும் ஈர்க்கக்கூடியவிருப்பமாக பார்க்கப்படுகிறது. பல நாடுகளும் எரிசக்தி மாற்றம் குறித்த தங்களது பணிகளிலிருந்து பெறப்பட்ட இதே போன்ற மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளன என்று நான் நம்புகிறேன்.

நண்பர்கள்

குறுகிய காலத்தில், சர்வதேச கூரிய கூட்டமைப்பு நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. 44 நாடுகளில், சுமார் 10 கிகாவாட் மின்சாரத்தை உருவாக்க உதவியுள்ளது. சூரியசக்தி  பம்புகளின் உலகளாவிய விலைகளைக் குறைப்பதிலும் இந்த கூட்டணி ஒரு பங்களித்துள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளில் தனியார் துறை முதலீடு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியாவிலிருந்து பல நம்பிக்கைக்குரிய சூரிய எரி சக்தி புத்தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த முயற்சி விரைவில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவை சரியான திசையிலான குறிப்பிடத்தக்க படிகளாகும்.

நண்பர்களே,

எரிசக்தி மாற்றத்தை உறுதி செய்ய, உலக நாடுகள் இணைந்து சில முக்கியமான அம்சங்களை விவாதிக்க வேண்டும். பசுமை எரிசக்தி முதலீடுகளின் செறிவில் உள்ள ஏற்றத்தாழ்வு கவனிக்கப்பட வேண்டும். வளரும் நாடுகளுக்கு உதவ உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் பரவலாக்கப்பட வேண்டும். குறைந்த  அளவில் வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவுகள் வளரும் நாடுகளுக்கு அதிகாரம் அளிப்பது, உயர் முன்னுரிமையாக இருக்க வேண்டும். விளிம்புநிலை சமூகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்குவது முக்கியமானது. சர்வதேச சூரியசக்தி திருவிழா இது போன்ற விவாதங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்

நண்பர்களே,

பசுமையான எதிர்காலத்திற்காக உலகத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதன்போது

கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி அமைப்பை உருவாக்க நாங்கள் தலைமை தாங்கினோம். சர்வதேச சூரியசக்தி கூட்டணியமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் நாங்களும் ஒருவர். உள்ளடக்கிய, தூய்மையான மற்றும் பசுமையான பூமியை உருவாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இந்தியாவின் ஆதரவு இருக்கும்.

சர்வதேச சூரிய எரி சக்தி விழாவிற்கு உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை வரவேற்கிறேன். சூரியனின்  எரிசக்தி நிலையான எதிர்காலத்தை நோக்கி உலகை வழிநடத்தட்டும். நன்றி, மிக்க நன்றி.

***

IR/RS/KV

 



(Release ID: 2052178) Visitor Counter : 41