தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் குறித்து விவாதிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் சண்டிகரில் நடைபெறும் 2-வது பிராந்திய கூட்டத்திற்கு, செல்வி ஷோபா கரண்ட்லஜே தலைமை தாங்கவுள்ளார்

Posted On: 05 SEP 2024 11:43AM by PIB Chennai

வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், லடாக், ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் ஆகியவற்றின் மண்டலக் கூட்டம் 06.09.2024 அன்று சண்டிகரில் நடைபெறும். தொழிலாளர் சீர்திருத்தங்கள், இஷ்ரம்– அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா மற்றும் மத்திய அரசுகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.   

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாடு முழுவதும் அளவில் நடத்தி வரும் தொடர் ஆலோசனைகளின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் முதல்மண்டல கூட்டம் 30.08.2024 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மண்டல கூட்டங்கள் 04.10.2024 வரை தொடரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052065

****

IR/RS/KV


(Release ID: 2052107) Visitor Counter : 46