இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவும் யுனெஸ்கோவும் தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை (CSAR) 2024 பதிப்பிற்கு 6 செப்டம்பர் 2024 அன்று பிரான்சின் பாரிஸில் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன

Posted On: 03 SEP 2024 11:19AM by PIB Chennai

தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை (CSAR) 2024 பதிப்பு செப்டம்பர் 6, 2024 வெள்ளிக்கிழமை, பிரான்சின் பாரிஸில் உள்ள ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இந்த வட்டமேஜை மாநாட்டை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், யுனெஸ்கோவின் இயற்கை அறிவியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை (CSAR), இந்தியாவின் ஜி20 தலைமைக் காலம், 2023-ன் போது ஷெர்பா-டிராக் முயற்சியாக கருத்தாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.

28 நாடுகளின் பிரதிநிதிகள், அவற்றின் தலைமை அறிவியல் ஆலோசகர்கள் (CSA) அல்லது பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 6 சர்வதேச அமைப்புகள் இந்த வட்டமேஜையில் இணைந்து, "திறந்த அறிவியலை வளர்த்தல், அறிவு சமச்சீரற்ற தன்மையை சரி செய்தல் மற்றும் உலகளவில் அறிவியல் ஆலோசனை திறனை உருவாக்குதல்" என்ற கருப்பொருளைப் பற்றி விவாதிக்கும். இந்த வட்டமேஜை மாநாட்டுக்கு, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் மற்றும் யுனெஸ்கோவின் உதவி தலைமை இயக்குநர் (இயற்கை அறிவியல் துணை இயக்குநர்) டாக்டர் லிடியா பிரிட்டோ ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

6 செப்டம்பர் 2024 அன்று, CSAR 2024-க்கு முன்னதாக அறிவியலில் நம்பிக்கையை வளர்ப்பதில், அறிவியல் ஆலோசனை வழிமுறைகளின் தாக்கம் பற்றி விவாதிப்பதுடன், தடையற்ற அறிவாற்றல் அமர்வு மற்றும் நாடு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான அறிவியல் ஆலோசனை திறனை வளர்ப்பதற்கான நுண்ணறிவுகளை உருவாக்கும். இந்த திறந்த அமர்வு, தலைமை அறிவியல் ஆலோசகர்கள் மற்றும் அதற்கு சமமானவர்கள், பல்வேறு உறுப்பு நாடுகளின் யுனெஸ்கோ நிரந்தர பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அறிவியல் மற்றும் அறிவியல் ஆலோசனை அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையே உரையாடலுக்கான வாய்ப்பை வழங்கும்.

இந்த 2024 வட்டமேசை பதிப்பு தென்னாப்பிரிக்கா இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்த முயற்சியைத் தொடர வழிவகுக்கும்.

***

(Release ID: 2051164)

MM/AG/KR


(Release ID: 2051256) Visitor Counter : 71