பிரதமர் அலுவலகம்
2024 ஆகஸ்ட் 31 அன்று மூன்று வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்
இந்த ரயில்கள் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரயில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்
புதிய வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கிப் பயண நேரத்தைக் குறைப்பதுடன், சுற்றுலாவுக்கும் ஊக்கமளிக்கும்
Posted On:
30 AUG 2024 2:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.
மீரட் - லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகமாகவும் வசதியுடனும் பயணிக்க உலகத்தரம் வாய்ந்த வழிகளை வழங்கும். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும். இந்த வந்தே பாரத் விரைவு ரயில்கள், வழக்கமான ரயில் பயணிகள், தொழில் துறையினர், வணிகத் துறையினர், மாணவர் சமூகத்தினர் உள்ளிட்ட பல பிரிவினரின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தரத்திலான ரயில் சேவையை வழங்கும்.
*********
PLM/ KV
(Release ID: 2050076)
Visitor Counter : 101
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam