பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிராவின் ஜல்கவுனில்,  லட்சாதிபதி பெண் சம்மேளணத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 25 AUG 2024 5:07PM by PIB Chennai

மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளுக்கு

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா…

நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, அதற்காக இன்றே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மகாராஷ்டிரா ஆளுனர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய வேளாண் அமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள, இந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு.பிரதாப் ராஜ் ஜாதவ் , மத்திய அமைச்சர் திரு.சந்திரசேகர், மண்ணின் புதல்வி ரக்‌ஷா கட்சே அவர்களே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் திரு.அஜீத் பவார் மற்றும் திரு.தேவேந்திர பட்னவிஸ் அவர்களே,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எண்ணை வாழ்த்துவதற்காக பெருமளவில் குழுமியுள்ள தாய்மார்களே, சகோதரிகளே. பார்க்கும் திசையெங்கும், தாய்மார்கள் கடல்போல் திரண்டு வந்துள்ளதைக் காண முடிகிறது. 

எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, நேபாளத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறிதுது எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த விபத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த, குறிப்பாக ஜல்கவுனைச் சேர்ந்த நண்பர்களை நாம் இழந்துள்ளோம்.   பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கம் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   விபத்து நிகழ்ந்த உடனேயே, மத்தி யஅரச நேபாள அரசைத் தொடர்புகொண்டது.   நமது அமைச்சர ரக்‌ஷா தாய் கட்சே-வை உடனடியாக நேபாளத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினோம்.   உயிரிழந்தவர்களின் உடல்களை, விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் எடுத்து வந்தோம்.   காயமடைந்தவர்களுக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகறிது.   அவர்கள் விரைவில் குணமடைய நான் வாழத்துகிறேன்.   பாதிக்கப்பட்ட அனைவருக்கும், மத்திய-மாநில அரசுகளின் உதவி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.  

நண்பர்களே, 

மகாராஷ்டிராவின் பெருமிதம் அளிக்கும் கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளை, உங்களிடம் காண்கிறேன்.   மகாராஷ்டிராவின் இந்த நன்மதிப்புகள், இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவியுள்ளன.   எனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று தான் தாயகம் திரும்பினேன்.   ஐரோப்பாவில் உள்ள போலந்து நாட்டிற்கு நான் சென்றேன்.  அங்கும், மகாராஷ்டிராவின் ஆதிக்கத்தை என்னால் காண முடிந்தது.   மகாராஷ்டிராவின் கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளையும் என்னால் காண முடிந்தது. போலந்து மக்க்ள, மகாராஷ்டிரா மக்களை பெரிதும் மதிக்கின்றனர்.  இங்கு அமர்ந்துகொண்டு அதனை கற்பனை செய்ய முடியாது.   அந்நாட்டுத் தலைநகரில் கோலாப்பூர் நினைவுச் சின்னம் உள்ளது.  கோலாப்பூர் மக்களின் சேவை மற்றும் விருந்தோம்பலைப் போற்றும் விதமாக, போலந்து மக்கள் இந்த நினைவுச் சின்னத்தை அமைத்துள்ளனர்.  

2-ம் உலகப்போரின்போது, போலந்து நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த கோலாப்பூர் அரச வம்சத்தைப் பற்றி உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள்.   சத்ரபதி சிவாஜி மகாராஜின் பண்புகளை அடியொற்றி, இந்த அரச குடும்பத்தினரும், சாமான்ய மக்களும், அகதிகளுக்கு சேவையாற்றியுள்ளனர்.    மகாராஷ்டிரா மக்களின் மனிதநேயம் மீதான அன்பு மற்றும் சேவையைப் பாராட்டியதை நான் கேட்டபோது,  எனது தலை பெருமிதத்தில் திளைத்த்து.  நாம், மகாராஷ்டிராவை தொடர்ந்து மேம்படுத்துவதுடன், அதன் பெயரையும் உலகளவில் உயர்த்துவோம். 

நண்பர்களே,

மகாராஷ்டிரா மீதான இந்த நன்மதிப்பு, மனஉறுதியும், தைரியமும் மிக்க் தாய்மார்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.   இந்த மண்ணின் தாய்மைத்துவம், ஒடுடுமொத்த நாட்டையும் ஈர்த்துள்ளது.  நமது ஜல்கவுன், வர்காரி பாரம்பரிய வம்சத்தினரின் யாத்திரைத் தலம் ஆகும்.   இது மாபெரும் மகான் முக்தாய் வாழ்ந்த மண் ஆகும்.   அவரது தியானமும், தவமும், தற்போதைய தலைமுறையினரையும் ஈர்ப்பதாக உள்ளது.  பாஹினாபாயின் பாடல் வரிகள் இன்றும் சமுதாயத்தின் வலிமையான சக்தியாகத் திகழ்கிறது.   தாய்மைத்துவ வலிமையின் பங்களிப்பு மகாராஷ்டிராவின் எந்தப் பகுதியிலும், அல்லது வரலாற்றின் எந்த கால கட்டத்திலும் ஈடு இணையற்றதாகவே உள்ளது.  சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழக்கைக்கு வழிகாட்டியது யார்?  அன்னை ஜீஜா தான் அதனைச் செய்தவர்.  

சமுதாயம், கல்வி மற்றும் நமது புதல்விகளின் பணிக்கு முக்கியத்துவம் அளிக்காதபோது, சாவித்ரிபாய் பூலே தான் அதனை நிறைவேற்ற முன்வந்தார்.    இது தான் இந்தியாவின் தாய்மையின் வலிமை என்பதோடு, சமுதாயம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளது.  தற்போதும், நம் நாடு வளர்ந்த நாடாக முன்னேற முயற்சிக்கும் வேளையில், நமது தாய்மையின் வலிமை மீண்டும் முன்வருகிறது.   ராஜமாதா ஜீஜா மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் தாக்கத்தை, மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைதுது சகோதரிகளிடமும் நான் காண்கிறேன்.  

நண்பர்களே, 

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் வந்தபோது, 3 கோடி சகோதரிகளை  ‘லட்சாதிபதி பெண்கள்’-ஆக ஆக்க வேண்டும் என்று நான் கூறினேன்.  அதாவது, சுய உதவிக் குழுக்களில் பணியாற்றும் 3 கோடி சகோதரிகள், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்  சம்பாதிக்கறார்கள்.   கடந்த 10 ஆண்டுகளில், ஒரு கோடி ‘லட்சாதிபதி பெண்கள்’  உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 லட்சத்திற்கும் அதிகமான ‘லட்சாதிபதி பெண்கள்’ அந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.  அவர்களில் ஒரு லட்சம் புதிய ‘லட்சாதிபதி பெண்கள்’ மகாராஷ்டிராவிலிருந்து உருவாகியுள்ளனர்.   இந்த சாதனையைப் படைப்பதற்காக, இங்குள்ள மகாயுதி அரசு, கடினமாக பாடுபட்டுள்ளது.   ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித்பவார்  அடங்கிய ஒட்டுமொத்தக் குழுவினரும்,  தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரமளிக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.   தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக,  மகாராஷ்டிராவில் ஏராளமான திட்டங்களும், புதிய முன்முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

நண்பர்களே,

‘லட்சாதிபதி பெண்கள்’-ஐ உருவாக்குவதற்கான இந்த இயக்கம், சகோதரிகள் மற்றும் புதல்விகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கானது மட்டுமல்ல.   இது, அனைத்துக் குடும்பங்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கும் அதிகாரமளிக்கும் மாபெரும் இயக்கம் ஆகும்.   இது, கிராமங்களின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் மாற்றியமைத்துள்ளது.   இங்கு குழுமியுள்ள ஒவ்வொரு சகோதரியும், புதல்வியும், அவர்கள் வருவாய் ஈட்டத் தொடங்கினால், அவர்களது உரிமைகள் அதிகரிக்கும்,  குடும்பத்தில் அவர்கள மீதான மரியாதை அதிகரிக்கும் என்பதை அறிவார்கள்.  ஒரு  சகோதரியின் வருமானம் அதிகரித்தால்,  செலவு செய்வதற்கு அந்தக் குடும்பத்திடம் போதுமான பணம் இருக்கும்.  மற்றொரு வகையில் சொல்வோமேயானால், ஒரு சகோதரி ‘லட்சாதிபதி பெண்’ ஆனால்கூட,  அது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றியமைக்கும்.  

நான் இங்கு வருவதற்கு முன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சகோதரிகளின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன்.  லட்சாதிபதி பெண்கள் அளைசரிடமும் நம்பிக்கை ஏற்படுடுள்ளது.   நான் அவர்களை,  லட்சாதிபதி பெண்கள் என்று தான் கூறுகிறேன், ஆனால் சிலர் இரண்டு லட்சம் ரூபாயும், சிலர் மூன்று லட்சம் ரூபாயும், சிலர் எட்டு லட்சம் ரூபாய் வரைகூட சம்பாதிக்கிறார்கள்.    அவர்கள், கடந்த சில மாதங்களில் இந்த வெற்றியை எட்டியுள்ளனர்.  

தற்போது நாங்கள், முத்ரா கடன் வரம்பை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.  சாலையோர சிறு வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தைத் தொடங்கி,  பினை உத்தரவாதம் இல்லாமலே கடன்களை வழங்குகிறோம்.   இந்தத் திட்டமும், நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு பெரிதும் பயனளித்துள்ளது.   நமது சகோதரிகளில் பலர், கைவினைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர், அவர்களுக்கு எங்களது அரசாங்கள்ம உத்தரவாதங்களை வழங்கி வருகிறது.  

சகோதரிகளே, உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.  மகாராஷ்டிராவில் உள்ள மகாயுதி அரசின் பணிகளுக்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் சொல்வதை திரும்பச் சொல்லுங்கள்-

பாரத் மாதா கி – ஜெய்

கைகளை உயர்த்தி, முட்டிகளை இறுகப் பற்றி, முழு பலத்துடன் குரல் எழுப்புங்கள்-

பாரத் மாதா கி – ஜெய்

பாரத் மாதா கி – ஜெய்

பாரத் மாதா கி – ஜெய்

பாரத் மாதா கி – ஜெய்

பாரத் மாதா கி – ஜெய்

மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048749

*******

MM/KV

 

 

!                    %           &           :             ;              “a”             ‘a’              ?



(Release ID: 2050028) Visitor Counter : 9