தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டாரங்களில் தேசிய விளையாட்டு தினத்தை அஞ்சல் துறை கொண்டாடியது

Posted On: 30 AUG 2024 10:27AM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினத்தை உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் வியாழக்கிழமை கொண்டாடிய அஞ்சல் துறை, நாடு முழுவதும்உள்ள அஞ்சல்  வட்டாரங்களில் தொடர்ச்சியான விளையாட்டு நிகழ்வுகளுக்கு  ஏற்பாடு செய்தது. கைப்பந்து, கேரம், சதுரங்கம், கயிறு இழுத்தல் மற்றும் பிளாங்க் போட்டி போன்ற வேடிக்கையான சவால்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வுகள் தோழமை, குழுப்பணி மற்றும் உள்ளடக்கிய உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது வலுவான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான துறையின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஃபிட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள அஞ்சல் ஊழியர்கள் ஃபிட் இந்தியா உறுதிமொழியை எடுத்தனர், இது ஆரோக்கியம் மற்றும் உடல் உறுதி செயல்பாடுகளுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சி அதன் பணியாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கான துறையின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

அஞ்சல் துறை விளையாட்டுகளுக்கு ஆதரவளிப்பதில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு ஆதரவளிக்கிறது.

அதன் அணிகளுக்குள் விளையாட்டை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அஞ்சல் தலை மூலம் இந்தியாவின் விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டாடுவதில் அஞ்சல் துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள், காமன்வெல்த் விளையாட்டுக்கள் மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு ஆளுமைகள் போன்ற கருப்பொருள்களில் துறை  ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது, இது நாட்டின் விளையாட்டு வீரர்களை மேலும் ஊக்குவிக்கிறது.

2024 தேசிய விளையாட்டு தினத்தில் பங்கேற்ற மற்றும் வெற்றிக்கு பங்களித்த அனைத்து ஊழியர்களுக்கும் அஞ்சல் துறை தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது..

*****

(Release ID: 2049984)

PKV / KV

 

 


(Release ID: 2049998) Visitor Counter : 45