இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்துக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா மலர் அஞ்சலி செலுத்தினார்
Posted On:
29 AUG 2024 1:36PM by PIB Chennai
தேசிய விளையாட்டு தினத்தையொட், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வு விளையாட்டு ஜாம்பவானுக்கு ஒரு மரியாதை செலுத்தும் வகையில் இருந்தது. அவருடைய சிறப்பு நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
அதைத் தொடர்ந்து, டாக்டர் மாண்டவியா, செல்வி காட்சே ஆகியோர் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் அவசியம் குறித்து ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் உரையாற்றினார்கள். தேசிய விளையாட்டு தினத்தன்று அனைத்து மக்களும் வெளிப்புற விளையாட்டுகளுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். இது நாடு முழுவதும் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான பெரும் முயற்சியை பிரதிபலிக்கிறது.
"2047 -ம் ஆண்டில் நமது 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நம் நாட்டை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்ற வேண்டும்" என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.
உடல் பயிற்சிகளின் நன்மைகளை குறிப்பிட்ட டாக்டர் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் ஒரு நிலையான உடற்பயிற்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார். "சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, குறுகிய தூரத்திற்கான, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாகும். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு எதிராக இது ஒரு சக்திவாய்ந்த முறை என்று தெரிவித்தார். மாசுபாட்டிற்கு எதிராக சைக்கிள் ஓட்டுவதே சிறந்த தீர்வு" என்று குறிப்பிட்ட அவர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சைக்கிள் ஓட்டுவதை பின்பற்ற வேண்டும் என்று மக்களை ஊக்குவித்தார்.
இந்த நாளையொட்டி, இந்தியா விளையாட்டு ஆணைய அலுவலர்களுடன் இணைந்து கயிறு இழுத்தல் போட்டி, நட்புணர்வு கால்பந்து போட்டி ஆகியவற்றில் இரண்டு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049682
***
IR/RS/KR
(Release ID: 2049727)
Visitor Counter : 66