பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மேஜர் தியான் சந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
29 AUG 2024 10:25AM by PIB Chennai
தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி புகழ்மிக்க ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்துக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று தமது டிவிட்டர் செய்தியில், விளையாட்டுகளுக்கு பேரார்வத்துடன் பங்களிப்பு செய்தவர்களையும், உலக அரங்கில் பெருமிதத்துடன் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அனைவரையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு பிரகாசிப்பதற்கான சூழலை உருவாக்க அனைத்து நிலைகளிலும் விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை திரு மோடி மீண்டும் உறுதி செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள். இன்று மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். விளையாட்டுகளில் பேரார்வம் கொண்டிருப்பவர்களுக்கும், இந்தியாவுக்காக விளையாடுகின்ற அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் தருணம் இதுவாகும். விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்க எங்கள் அரசு உறுதிபூண்டிருப்பதோடு கூடுதலான இளைஞர்கள் விளையாடவும், பிரகாசிக்கவும் உறுதி செய்கிறது.”
***
(Release ID: 2049620)
SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2049629)
आगंतुक पटल : 95
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam