இந்திய போட்டிகள் ஆணையம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வயாகாம் 18, டிஜிட்டல் 18 மீடியா நிறுவனம், ஸ்டார் இந்தியா பிரைவேட் நிறுவனம் மற்றும் ஸ்டார் டெலிவிஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
28 AUG 2024 6:34PM by PIB Chennai
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வயாகாம் 18 மீடியா பிரைவேட் நிறுவனம் மிடெட், டிஜிட்டல் 18 மீடியா நிறுவனம், ஸ்டார் இந்தியா பிரைவேட் நிறுவனம் மற்றும் ஸ்டார் டெலிவிஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு பகுதியான வயாகாம் 18 மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு முற்றிலும் சொந்தமான எஸ்.ஐ.பி.எல் ஆகியவற்றின் பொழுதுபோக்கு வணிகங்களை (வேறு சில அடையாளம் காணப்பட்ட வணிகங்களுடன்) இணைக்க முன்மொழியப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி போன்ற பல வணிகங்களில் ஈடுபட்டுள்ளது; பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல்; பெட்ரோகெமிக்கல்ஸ் உற்பத்தி மற்றும் விற்பனை; இரசாயனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை; ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை; ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள்; மற்றும் இந்தியாவிலும் உலகெங்கிலும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
தொலைக்காட்சி (டிவி) சேனல்களை ஒளிபரப்புதல், ஓடிடி தளத்தின் செயல்பாடு, டிவி சேனல்களில் வணிக விளம்பர இடத்தை விற்பனை செய்தல், வணிகப் பொருட்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் இந்தியாவிலும் உலகெங்கிலும் நேரடி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றில் வயாகாம் 18 ஈடுபட்டுள்ளது. வயாகாம் 18 திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோக வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஒலி. ஒளி உள்ளடக்கம் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஓடிடி தளத்தின் செயல்பாடு மற்றும் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வணிக விளம்பர இடத்தை விற்பனை செய்வது உள்ளிட்ட பல ஊடக நடவடிக்கைகளில் ஸ்டார் இந்தியா தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாகும்.
ஸ்டார் டெலிவிஷன் புரொடக்சன் நிறுவனம் என்பது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் மற்றும் மறைமுகமாக, வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானது.
தன்னார்வ மாற்றங்களுக்கு இணங்குவதற்கு உட்பட்டு முன்மொழியப்பட்ட இணைப்புக்கு ஆணையம் ஒப்புதல் அளித்தது.
இந்திய போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049484
----
IR/KPG/DL
(Release ID: 2049529)
Visitor Counter : 51