பாதுகாப்பு அமைச்சகம்
2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை பாதுகாப்புத்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
21 AUG 2024 10:01AM by PIB Chennai
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் திரு ஜேக் சல்லிவனையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தியா-அமெரிக்க உறவுகள், பல மட்டங்களில் பாதுகாப்பு ஈடுபாடுகளில் வளர்ந்து வரும் வேகத்தின் பின்னணியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறையினருடன் உயர்மட்ட வட்டமேஜை கூட்டத்திற்கும் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குவார். இந்தப் பயணத்தின் போது இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுவார்.
***
(Release ID: 2047127)
PKV/AG/KR
(Release ID: 2047201)
Visitor Counter : 65