குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவருடன் மலேசிய பிரதமர் சந்திப்பு

Posted On: 20 AUG 2024 5:56PM by PIB Chennai

மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிம், இன்று (20.08.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

மலேசியப் பிரதமராக முதன்முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் இப்ராஹிமை வரவேற்ற குடியரசுத் தலைவர், ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய பொதுவான மதிப்புகள், இந்தியா-மலேசியா உறவுகளுக்கு வழிகாட்டும் சக்தியாக உள்ளன என்று கூறினார்.

விரிவான  ராணுவ ஒத்துழைப்பாக மேம்படுத்துவதன் மூலம், இந்தியா-மலேசியா இடையேயான உறவுகளை மேலும் தீவிரப்படுத்த இரு தரப்பினரும் முடிவு செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் தலைவர், ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் இதை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க பணியாற்றி வருவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

'உலகளாவிய தெற்கில்' ஒரு வலுவான கூட்டாளியாக மலேசியாவை இந்தியா பார்க்கிறது என்று குடியரசுத் தலைவர் மேலும் கூறினார். ஆசியான் அமைப்பில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாகவும், நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வையிலும் மலேசியா முக்கிய நாடாக திகழ்கிறது

2025-ம் ஆண்டில் ஆசியான் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுக்கொள்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த குடியரசுத் தலைவர், மலேசியாவுடன் இந்தியா தொடர்ந்து பணியாற்றுவதாகவும், அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு, அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் இப்ராஹிம் மூலம், குடியரசுத்தலைவர் முர்மு, சமீபத்தில் நடைபெற்ற மலேசிய மன்னர் திரு சுல்தான் இப்ராஹிம் முடிசூட்டு விழாவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

***

MM/AG/DL



(Release ID: 2047034) Visitor Counter : 44