நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2024 6:29PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று, மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர், கூடுதல் செயலாளர், பொருளாதார நிதிச் சேவையின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, சிட்பி, நபார்டு ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

43 மண்டல ஊரக வங்கிகளுடனான இந்த கூட்டம், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்புகளில் வணிக வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரதமர் விஸ்வகர்மா மற்றும் பிரதமர் சூரிவீடு இலவச மின்சார திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை அனுமதிக்கும் போது, பயனாளிகளை தெளிவாக அடையாளம் காண்பதில், அதிக கவனம் செலுத்துமாறு, மண்டல ஊரக வங்கிகளை மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். மண்டல ஊரக வங்கிகள் தரைமட்ட வேளாண் கடன் வழங்கலில் தங்கள் பங்கை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் விளக்கக் காட்சியின் போது, 2022-ம் ஆண்டில் வழக்கமான மறுஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை திருமதி சீதாராமன் பாராட்டினார், மேலும் எதிர்காலத்திலும் இந்த விரைவைத் தொடருமாறு ஊரக வங்கிகளை வலியுறுத்தினார். 2023-24 நிதியாண்டில் மண்டல ஊரக வங்கிகள் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹7,571 கோடியை பதிவு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046720

***

IR/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2046751) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Punjabi , Telugu , Kannada