பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுக்கள் புதுதில்லியில் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
19 AUG 2024 4:04PM by PIB Chennai
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுக்கள் புதுதில்லியில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஜப்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு கிஹாரா மினோரு,அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி யோகோ காமிகாவா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இப்பேச்சுகளுக்கு இடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.
இந்த இருதரப்பு பேச்சுகளின் போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிவகைகளை கண்டறிவது, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.
பரஸ்பரம் இருதரப்பு அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2046631
***
IR/AG/KR
(रिलीज़ आईडी: 2046672)
आगंतुक पटल : 101