பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்திய லோக்பால் அமைப்பில் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்

Posted On: 15 AUG 2024 12:39PM by PIB Chennai

 78-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய லோக்பால் அமைப்பின் அலுவலகத்தில் அதன் தலைவர் நீதிபதி திரு அஜய் மாணிக்ராவ்  கன்வில்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். நீதிபதிகள் திரு சஞ்சய் யாதவ், திரு சுஷில் சந்திரா, திரு பங்கஜ் குமார், திரு அஜய் திர்கே ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். லோக்பால் அமைப்பின்  உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதிபதி திரு அஜய் மாணிக்ராவ்  கன்வில்கர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். சுதந்திர இந்தியாவை நமக்கு வழங்க தங்களின் இன்னுயிர் ஈந்த தியாகிகள் அனைவரையும்  அவர் நினைவு கூர்ந்தார்.

தற்சார்பு  இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக அனைத்து முனைகளிலும் நமது நாடு விரைந்து முன்னேறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியுடன் வணிக செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதன் கூடவே, பேராசை கொண்ட சிலரும் வருகிறார்கள். இதனைக் கண்காணிப்பதற்கும் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்கும் லோக்பால் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு லோக்பால் அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிறந்த சேவை  வழங்க அவர் வலியுறுத்தினார்.

இந்த சிறப்பு மிகு விழாவில், லோக்பால் அமைப்பின் தலைவரும் உறுப்பினர்களும் மரக்கன்றுகள் நட்டனர்.

***

 

SMB/RS/KV



(Release ID: 2045582) Visitor Counter : 18


Read this release in: English , Marathi , Urdu , Hindi