நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைப்பு 'சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்கான தரப்படுத்தல்' குறித்த பயிலரங்கை நடத்தியது
Posted On:
13 AUG 2024 11:04AM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் தொடர்பான விவகாரங்கள் குறித்த தரப்படுத்தலுக்காக, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறை என்ற பெயரில் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ளது.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் பொருட்டு, 'சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்கான தரப்படுத்தல்' என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை 12.08.2024 அன்று நடத்தியது.
இப்பயிலரங்கில் உரையாற்றிய இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி, "புதிய சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறையுடன், சிறந்த தரங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அனைத்து சுற்றுச்சூழல் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குகிறோம்" என்று தெரிவித்தார். நாட்டிற்கும், உலகிற்கும் தரத்தை உருவாக்குவதை தமது அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். சுற்றுச்சூழல் தரப்படுத்தல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மையில் வரையறைகளை நிர்ணயிப்பதில் முன்னோடியாக மாறுவதற்கான தொலைநோக்குடன் இந்திய தர நிர்ணய அமைப்பு அடுத்த இரண்டு மாதங்களில் கருத்தரங்குகளை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன் தனது உரையில், "தரநிலைகளைப் பற்றி நாம் பேசும்போது, சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புடைய குழுக்களுடனும், நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இடையிலான தொடர்புகள் மிக முக்கியமானவை" என்று கூறினார். பெரிய சமூகத்தை பாதிக்கும் பல்வேறு விவகாரங்களில் தரநிலைகளை வெளிக்கொணர இந்திய தர நிர்ணய அமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடையோர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த பயிலரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044735
***
IR/RS/RR
(Release ID: 2044763)
Visitor Counter : 63