தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஆலோசனைகளை வழங்க 2024 ஆகஸ்ட் 13 அன்று இபிஎஃப்ஓ அமைப்பு 5-வது நேரலை அமர்வை ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 12 AUG 2024 8:12PM by PIB Chennai

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO-இபிஎஃப்ஓ) "இப்எஃப் பரிமாற்றம்" என்ற தலைப்பில் 2024 ஆகஸ்ட் 13 அன்று மதியம் 12 மணிக்கு 5வது நேரலை அமர்வை ஏற்பாடு செய்துள்ளது. முகநூல் எனப்படும் பேஸ்புக் ( @socialepfo ), இன்ஸ்டாகிராம் ( @social_epfo ), ஈபிஎஃப்ஓ-வின் யூடியூப் ( @socialepfo ) கணக்குகளில் இந்த நேரலை அமர்வு நடைபெறும். அமர்வின் போது, இபிஎஃப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம், அதன் செயல்முறை உள்ளிட்டவை தொடர்பாக பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்களால் பதிலளிக்கப்படும்.

பல்வேறு சேவைகள் குறித்து உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடன் இபிஎஃப்ஓ ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை நேரலை அமர்வுகளை ஏற்பாடு செய்கிறது.

முதல் நேரலை அமர்வு 2024 மே 14 அன்று நடைபெற்றது. இந்த அமர்வுகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதையும், உறுப்பினர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

*****

 (Release ID: 2044678)

PLM/RR



(Release ID: 2044759) Visitor Counter : 19