புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 'மாதிரி சூரிய கிராமத்தை' செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Posted On: 12 AUG 2024 1:36PM by PIB Chennai

பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 'மாதிரி சூரிய கிராமத்தை' செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்கள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2024, ஆகஸ்ட் 9 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

'மாதிரி சூரிய கிராமம்' என்ற திட்டத்தின் கீழ், சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும், கிராம சமுதாயங்கள் தங்கள் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னம்பிக்கை அடைவதற்கும் நாடு முழுவதும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி சூரிய கிராமத்தை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி சூரிய கிராமம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வழங்கும் வகையில், இந்த சக்திக்காக மொத்தம் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி முறையின் கீழ் ஒரு கிராமமாகக் கருதப்படுவதற்கு, அது 5,000-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வருவாய் கிராமமாக இருக்க வேண்டும் (அல்லது சிறப்பு வகை மாநிலங்களுக்கு 2,000).

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் சூரிய சக்தியில் இயங்கும் சமூகங்களுக்கு திறம்பட மாறுவதை உறுதி செய்து, நாடு முழுவதும் உள்ள மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும்.

பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரத் திட்டத்திற்கு 2024  பிப்ரவரி 29 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது சூரிய கூரை திறனின் பங்கை அதிகரிப்பதையும், குடியிருப்பு வீடுகள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டம் ரூ.75,021 கோடி செலவில் 2026-27 நிதியாண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது.

***

SMB/AG/KV



(Release ID: 2044503) Visitor Counter : 27