மத்திய அமைச்சரவை
2024-25 முதல் 2028-29-ம் நிதியாண்டு காலகட்டத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
09 AUG 2024 10:17PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் கிராம்ப்புற வீட்டுவசதித் திட்டத்தை 2024-25 முதல் 2028-29-ம் நிதியாண்டு வரையிலான நிதியாண்டில் செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்படும்.
விவரங்கள்:
அமைச்சரவை ஒப்புதல் அளித்த விவரம் வருமாறு:
*2024-25 முதல் 2028-29 வரையிலான நிதியாண்டிற்கான மொத்த ஒதுக்கீடு 3,06,137 கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் பங்கு 2,05,856 கோடி ரூபாய், மாநில அரசின் பங்களிப்பு 1,00,281 கோடி ரூபாய் ஆக இருக்கும்.
*மாற்றியமைக்கப்பட்ட விலக்கு அளவுகோல்களைப் பயன்படுத்தி தகுதியான கிராமப்புற குடும்பங்களை அடையாளம் காண ஆவாஸ்+ பட்டியலைப் புதுப்பித்தல்.
*பயனாளிகளுக்கான உதவித் தொகை சமவெளிப் பகுதிகளில் தற்போதுள்ள விகிதங்களில் ரூ.1.20 லட்சமாகவும், வடகிழக்கு மண்டலம் / மலை மாநிலங்களில் ரூ.1.30 லட்சமாகவும் தொடரும்.
*திட்ட நிதிகளில் 2% நிர்வாக நிதிகள் 1.70% மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் 0.30% மத்திய அளவில் தக்கவைக்கப்பட வேண்டும்.
நன்மைகள்:
*31.03.2024க்குள் கட்டி முடிக்கப்படாத மீதமுள்ள 35 இலட்சம் வீடுகள் முந்தைய கட்டத்தில் இருந்த 2.95 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை அடைய முடியும்.
*அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும். மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதன் மூலம் சுமார் 10 கோடி தனிநபர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*இத்திட்டம், தரமில்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்ல தரமான பாதுகாப்பான வீட்டைப் பெற உதவும். இது பயனாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக உள்ளடக்கத்தை உறுதி செய்யும்.
பின்னணி:
கிராமப்புறங்களில் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை அடைவதற்காக, மார்ச் 2024 வரை படிப்படியாக 2.95 கோடி வீடுகளை அடிப்படை வசதிகளுடன் கட்டுவதற்கான இலக்குடன் ஏப்ரல் 2016 முதல் பிரதமரின் கிராமப் புற வீட்டு வசதித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
****
PLM/DL
(Release ID: 2044062)
Visitor Counter : 121
Read this release in:
Malayalam
,
Telugu
,
Assamese
,
English
,
Kannada
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati