சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

போக்சோவை விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றம்

Posted On: 09 AUG 2024 12:38PM by PIB Chennai

குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம், 2018-ன் கீழ், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் தொடர்பான, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து வைப்பதற்காக, பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட, விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு 2019 அக்டோபர் முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் முதலில், ஓராண்டுக்கு செயல்படுத்தப்பட்டு, மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் தற்போது 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி செலவிடப்படும். மத்திய அரசு சேவை திட்ட முறையில் (60:40, 90:10) ஒரு நீதித்துறை அலுவலர், 7 உதவிப் பணியாளர்கள் மற்றும் அன்றாடச் செலவுகளுக்காக நெகிழ்வு மானியம் ஆகியவற்றிற்காக நிதி விடுவிக்கப்படுகிறது. FTSC திட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள செயல்பாட்டு நீதிமன்றங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்பட்டு, திருப்பிச் செலுத்தும் அடிப்படையில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, எஃப்.டி.எஸ்.சி.க்கள் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதி ஆண்டு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

இந்த தகவலை மத்திய சட்டம்-நீதித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/KR/DL



(Release ID: 2043811) Visitor Counter : 7