பிரதமர் அலுவலகம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2024 8:14AM by PIB Chennai
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளைத் தொடரவும், இந்தியாவை பெருமைப்படுத்தவும் நீரஜ் தொடர்ந்து ஊக்குவிப்பார் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"நீரஜ் சோப்ரா, சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்! மீண்டும், மீண்டும் தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மற்றொரு ஒலிம்பிக் வெற்றியுடன் திரும்புவது இந்தியாவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு நல்வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களின் கனவுகளைத் தொடரவும், நம் தேசத்தை பெருமைப்படுத்தவும் அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார். @Neeraj_chopra1"
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2043458)
வருகையாளர் எண்ணிக்கை : 103
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam