பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வினேஷ், சாம்பியன்களில் நீங்கள் ஒரு சாம்பியன் பிரதமர்

இன்றைய பின்னடைவு வேதனையளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்புகிறேன் பிரதமர்

प्रविष्टि तिथि: 07 AUG 2024 1:16PM by PIB Chennai

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தேசத்தின் வேதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது;

வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறீர்கள்.

இன்றைய பின்னடைவு வேதனையளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை, வார்த்தைகள் வெளிப்படுத்தும் என்று நான் விரும்புகிறேன்.

அதே நேரத்தில், நீங்கள் நெகிழ்ச்சியின் உருவகமாக இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது எப்போதும் உங்கள் இயல்பு.

வலிமையுடன்  மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்.

@Phogat_Vinesh

----

(Release Id 2042513)

MM/KPG/KR


(रिलीज़ आईडी: 2042560) आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam