வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் 15.53 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது
प्रविष्टि तिथि:
06 AUG 2024 4:18PM by PIB Chennai
புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி, புத்தொழில் நிறுவனங்கள், நாட்டில் புத்தொழில் தொடங்குதல் சூழலில் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு 2016, ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது.
2024, ஜூன் 30 நிலவரப்படி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை 1,40,803 நிறுவனங்களை புத்தொழில் நிறுவனங்களாக அங்கீகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு புத்தொழில் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் 15.53 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042116
***
IR/RS/KR/DL
(रिलीज़ आईडी: 2042240)
आगंतुक पटल : 90