திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 18 கைவினைப் பிரிவு கைவினைஞர்களுக்கு ஆதரவை வழங்குகிறது

Posted On: 05 AUG 2024 1:04PM by PIB Chennai

நாட்டின் 26 மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கைவினைஞர்கள் மற்றும்  கைவினைக்கலைஞர்களின்  பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் அடிப்படை திறன் பயிற்சி வடிவத்தில் முறையான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

2024,  ஜூலை 19, நிலவரப்படி இத்திட்டத்தின் அடிப்படை திறன் பயிற்சியில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர்

பிரதமரின் விஸ்கர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள் மற்றும் கருவிகளால் வேலை செய்யும் 18 பிரிவுகளின் கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவை வழங்குவதே இதன் நோக்கமாகும். விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தின் கூறுகளில் அடங்கும். பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைக்கலைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைக்கலைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை தங்கள் பணியில் ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, அவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைப்புகளை வழங்கும்.

இந்தத் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறை, மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.நாடு முழுவதும் பிரதமரின் விஸ்வகர்மாவை சுமூகமாக செயல்படுத்துவதற்காக, தேசிய வழிகாட்டுக் குழுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

PKV/KPG/DL


(Release ID: 2041853) Visitor Counter : 62