குடியரசுத் தலைவர் செயலகம்
வியட்நாம் பிரதமர் குடியரசுத் தலைவரை சந்தித்தார்
Posted On:
01 AUG 2024 9:29PM by PIB Chennai
வியட்நாம் பிரதமர் திரு பாம் மின் சின் இன்று (ஆகஸ்ட் 1, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வியட்நாம் பிரதமரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா-வியட்நாம் உறவுகள் நெருங்கிய கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளின் உறுதியான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் சர்வதேச அமைப்புகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது என்றும் கூறினார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூணாக வியட்நாம் திகழ்கிறது என்றும், நமது இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வையின் முக்கிய கூட்டாளியாக வியட்நாம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் பரிமாற்றங்கள் முதல் பாதுகாப்பு கூட்டாண்மை, வர்த்தகம், முதலீடு, வளர்ச்சியில் ஒத்துழைப்பு, கலாச்சார உறவுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பு என பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஈடுபாடுகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
புத்த மத பாரம்பரியம் மற்றும் நாகரீக தொடர்புகளை பகிர்ந்து கொள்வது பற்றி குறிப்பிட்ட இரு தலைவர்களும், வியட்நாமில் உள்ள பாரம்பரிய இடங்களை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.
பிரதமர் பாம் மின் சின்னின் வருகை, இந்தியா-வியட்நாம் விரிவான பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்றும், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.
*************
MM/AG/KV
(Release ID: 2040576)
Visitor Counter : 65