சுரங்கங்கள் அமைச்சகம்
உலகில் அலுமினியம் உற்பத்தி செய்யும் 2-வது பெரிய நாடாக திகழும் இந்தியா
प्रविष्टि तिथि:
01 AUG 2024 12:12PM by PIB Chennai
அலுமினியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, 2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) 10.28 லட்சம் டன்னாக இருந்த அலுமினியம் தாது உற்பத்தி நடப்பு நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 10.43 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 1.2 சதவீதம் அதிகமாகும்.
இதே போன்று இரும்புத் தாது உற்பத்தியும், 9.7 சதவீதம் வளர்ச்சி அடைந்து 79 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், சுண்ணாம்புக் கல் உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சியடைந்து 116 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், மாங்கனீசு தாது உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 1.0 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் உள்ளன.
இதன் மூலம் அலுமினியம் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகவும், சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் 3-வது பெரிய நாடாகவும், இரும்புத் தாது உற்பத்தியில் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039988
----
MM/KPG/KR
(रिलीज़ आईडी: 2040009)
आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada