மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

செல்வி. பூஜா கெட்கரின் குடிமைப் பணி தேர்வு ரத்து, புதிதாக தேர்வுகளில் பங்கேற்கவும் தடை

Posted On: 31 JUL 2024 3:18PM by PIB Chennai

2022-ம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக பணி  நியமனம் வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்த செல்வி பூஜா மனோரமா திலிப் கெட்கர், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக முறைகேடான வகையில், தமது அடையாளங்களை மாற்றி பலமுறை தேர்வு எழுதியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) விசாரணை நடத்தியது. இது தொடர்பாக பூஜா கெட்கரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசுக்கு அவர் அளித்துள்ள பதிலை பரிசீலித்த மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூஜா கெட்கர், குடிமைப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இனி வருங்காலத்தில் அவர் எந்த ஒரு வேலைக்கான தேர்வு/ நேர்காணல்களில் பங்கேற்கவும் நிரந்தர தடை விதித்தும் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

பூஜா கெட்கர் மீதான புகாரை தொடர்ந்து கடந்த 2009 முதல் 2023 வரை 15 ஆண்டுகளில் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 15,000-க்கும் மேற்பட்டோரின் தரவுகள் மற்றும் ஆவணங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறு ஆய்வு செய்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்  தேர்வாணையம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039580   

***

MM/AG/KR/DL


(Release ID: 2039844) Visitor Counter : 59