குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப் படைத்த மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2024 3:59PM by PIB Chennai

பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள  குடியரசு துணைத்தலைவர், அவர்களுடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டுவதாக கூறியுள்ளார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒலிம்பிக்கில் ஒரு இந்தியராக இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் சிறப்பான சாதனையையும் திரு தன்கர் பாராட்டினார். அவருக்கும், சரப்ஜோத் சிங்கிற்கும் எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2039024)

IR/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2039064) வருகையாளர் எண்ணிக்கை : 119
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Punjabi , Gujarati