பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

प्रविष्टि तिथि: 29 JUL 2024 12:08PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 2024, ஜூலை 30, அன்று வளர்ச்சியடைந்த பாரத்தை நோக்கியப் பயணம், மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, வளர்ச்சியை நோக்கிய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வை குறித்தும், அதற்கான முயற்சியில், தொழில்துறையின் பங்களிப்புக் குறித்தும் விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்துறை, அரசு, தூதரக அதிகாரிகள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவுள்ளனர். த்துடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மையங்களிலிருந்தும் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளனர்.

***

VL/IR/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2038669) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam